கோவேக்சின் 3வது கட்ட சோதனை – 93 சதவீதம் வெற்றி !!

0
29

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், அஸ்ட்ரா செனகா மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் செயல்திறன் கொண்டது என்று 3-வது கட்ட பரிசோதனை முடிவுகளை வெளியிட்டு பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்ட பரிசோதனை முடிவின் அறிக்கையின்படி 25 நகரங்களில் 130 கொரோனா பாதித்த நோயாளிகளிடம் 2 டோஸ் போட்டு 2 வாரங்களுக்கு பிறகு பரிசோதனை முடிவடைந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

சார்ஸ் கோவிட்-2, டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2 சதவீதம் செயல்படுகிறது. தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக 93.4 சதவீதம் செயல்திறனுடன் உள்ளது என்றும் அறிவித்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அங்கீகாரம் கோரி மத்திய அரசு விண்ணப்பித்துள்ள நிலையில் 3-வது கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here