பனீர் மஷ்ரூம் மசாலா

0
125

தேவையான பொருட்கள் :

நெய் – 2 tsp
எண்ணெய் – 1tsp
சீரகம் – 1 tbsp
ஏலக்காய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 tbsp
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் – சிட்டிகை
உப்பு – சுவைக்கு ஏற்ப
கடலை மாவு – 1 tsp
சிவப்பு மிளகாய் தூள் – சுவைக்கு ஏற்ப
தனியா தூள் – 2 tbsp
பச்சை பட்டாணி – 1/2 கப்
தண்ணீர் – 1 கப்
காளான் – 1/2 கப்
பனீர் – 1/2 கப்
கரம் மசாலா – 1 tbsp
கஸ்தூரி மேதி – சிறிதளவு
ஃபிரெஷ் கிரீம் – 2 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து நெய் ஊற்றுங்கள். உருகியதும் சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளியுங்கள்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் , பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமாக வந்ததும் அரைத்த தக்காளி கூழ் சேர்த்து வதக்குங்கள்.

அதில் மஞ்சள், இப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வெந்துவிடும். அடுத்ததாக எண்ணெய் பிரிந்து வரும்போது தூள் வகைகளை சேர்த்து வதக்குங்கள். அதோடு பட்டாணியும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது அரை கப் தண்ணீர் சேத்து கொதிக்க வையுங்கள். பச்சை வாசனை போனதும் பனீர் மற்றும் மஷ்ரூம் சேர்த்து கிளறிவிட்டு மீண்டும் அரை கப் தண்ணீர் சேர்த்து தட்டுபோட்டு மூடிவிடுங்கள். சிறிது நேரம் கழித்து கஸ்தூரி மேதி தூவுங்கள்.

சிறு தீயில் சில நிமிடங்கள் கொதிக்கட்டும். உங்களுக்கு தேவையான கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here