நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிளகு குழம்பு

0
138

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 50 கிராம்,
பூண்டு – 15 பற்கள்,
புளி – 1 எலுமிச்சை அளவு,
உப்பு – தே.அ

வறுத்து அரைப்பதற்கு

மல்லி (தனியா)- 3 tbsp
உளுந்தம் பருப்பு – 1 tbsp
கடலைப் பருப்பு – 1 tbsp
மிளகு – 2 tbsp
பச்சரிசி – 1 tsp

தாளிப்பதற்கு

நல்லெண்ணெய் – 6 tbsp
கடுகு – 1 tsp
சீரகம் – 1 tsp
வெந்தயம் – 1/4 tsp
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

முதலில் குழம்புக்கு தேவையான பொடியை அரைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு முன் புளியை ஊற வைத்துவிடுங்கள்.

தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்ற் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து சிவக்க வறுத்து ஆற வையுங்கள். சூடு போனதும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு , சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

பின் அரைத்த பொடியை சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது ஊற வைத்துள்ள புளியை கரைத்து ஊற்றுங்கள்.

அடுத்ததாக உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

குழம்பு பச்சை வாசனை போனதும் பக்கத்தில் தாளிக்க கடாய் வைத்து கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் ஊற்றுங்கள்.

கிளறிவிட்டு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதாம் மிளகு குழம்பு தயார்.

இந்த குழம்பை வீட்டில் காய்கறி இல்லாத நாட்களில் கூட செய்யலாம். அந்த குழம்பு பொடியை அரைத்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமென்றாலும் சட்டென குழம்பு தயாராகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here