தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது!!

0
101

பெட்ரோல்-டீசல் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டாலும் 2 நாட்கள் அல்லது 3 நாட் களுக்கு ஒருமுறை தொடர்ந்து உயர்த்தப்பட்டே வருகிறது.

இதன்காரணமாக பல மாநிலங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விற்பனை ஆகிறது. சென்னையில் கடந்த மாதம் மட்டும் 14 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை கடந்த மாதமே பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. சென்னையில் கடந்த 29-ந்தேதி பெட்ரோல் ரூ.99.80-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு 3 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.

இந்தநிலையில் இன்று சென்னை உள்பட தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்து 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டியது.

சென்னையில் 33 காசுகள் அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13-க்கு விற்கப்பட்டது. தமிழகத்திலேயே கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை ரூ.102.14-க்கு விற்கப்பட்டது.

கோப்புபடம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here