தேவையான பொருட்கள்
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலைப் – 2 கப்,
கடலைப்பருப்பு – அரை கப்,
வெங்காயம் – 2
இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
வேர்க்கடலையை ரவை போல் பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் வேர்க்கடலைப் பொடி, வெங்காயம், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
இதிலிருந்து மாவை எடுத்து சிறு உருண்டைகளாக செய்து உள்ளங்கையில் வைத்து வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.