வெறும் ரூ.6,699-க்கு இப்படி ஒரு தரமான Phone-ஆ!

0
149

இந்தியாவில், டெக்னோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Tecno Spark Go 2021 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டில் அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் கோ 2020 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட “வாரிசு” ஆகும்.

இது அதன் முன்னோடிகளை விட பல வகையான மேம்படுத்தல்களுடன் வந்தாலும் கூட ரூ.10,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இதன் விற்பனை அமோகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சந்தையில் உள்ள ரியல்மி சி 20, போக்கோ சி 3, இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 மற்றும் பிறவற்றிற்கு எதிராக போட்டியிடும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை? எதன் வழியாக வாங்க கிடைக்கும்? என்னென்ன அம்சங்கள்? இதோ முழு விவரஙகள்.

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 – அம்சங்கள், விவரக்குறிப்புகள்:

– 6.52 இன்ச் டிஸ்ப்ளே- எச்டி + ரெசல்யூஷன்

– டிஸ்பிளேவின் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு

– செங்குத்தாக அடுக்கப்பட்ட டூயல் ரியர் கேமரா அமைப்பு
– 13MP மெயின் சென்சார் இரண்டாம் நிலை லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது
– முன்பக்கத்தில் 8MP செல்பீ கேமரா

– பெயர் குறிப்பிடப்படாத ப்ராசஸரால் இயக்கப்படுகிறது
– மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுக்கான ஆதரவு
– 2 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

– 5,000 எம்ஏஎச் பேட்டரி
– ஆண்ட்ராய்டு கோ ஓஎஸ்

– டூயல் 4 ஜி வோல்டிஇ

– மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
– வைஃபை
– ப்ளூடூத்
– 3.5 மிமீ ஹெட்ஜாக்
– பின்புற பேனலில் கைரேகை ஸ்கேனர்

இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஆனது ரூ.7,299 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ரூ.6,699 க்கு வாங்கலாம்.

MediaTek Helio A20
டிஸ்பிளே 6.52 inches (16.56 cm)
சேமிப்பகம் 32 GB
கேமரா 13 MP + 2 MP
பேட்டரி 5000 mAh
price_in_india 7499
ரேம் 3 GB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here