பிக் பாஸ் புகழ் நடிகை காஜல் பசுபதிக்கு இரண்டாம் திருமணம்?

0
79

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை காஜல் பசுபதி. அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைத்து சில வாரங்கள் இருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் காஜல் பசுபதி எப்போதும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் ட்விட்டரில் தனக்கு விரைவில் திருமணம் நடைபெற போவதாக பதிவிட்டு உள்ளார். அதை பார்த்து நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது….அடுத்த வாரம் திருமணம்….கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க..” என அவர் கூறி உள்ளார்.

வாழ்த்துக்கள் ஒருபுறம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நெட்டிசன்களை prank செய்ய தான் இப்படி செய்து வருகிறார் எனவும் சிலர் கூறி வருகின்றனர். உண்மையிலேயே அவருக்கு திருமணம் நடைபெறப்போகிறதா அல்லது prank தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சாண்டி மாஸ்டர் தற்போது சில்வியா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கின்றனர். சாண்டி குடும்பத்துடன் கூட காஜல் பசுபதி நெருக்கமாக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here