தமிழகத்தில் இன்று 5,044 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்!!

0
86

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 5044 கொரேனாாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்த்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவது போல் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கொரோனா தினசரி தொற்று 4480 ஆக குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 24,84,177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தினசரி உயிரிழப்பு விரைவில் 100-க்கும் குறைவாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் 102 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 32,721 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவிலிருந்து 5,044 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதையடுத்து 24,13,930 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here