10 நிமிடத்தில் கறிவேப்பிலை ரெசிபி ரெடி..

0
80

தேவையான பொருட்கள் : 

கறிவேப்பிலை – 1 கப்
நல்லெண்ணெய் – 1 tbsp
சீரகம் – 1 tsp
கடுகு – 1 tsp
வெந்தயம் – 1/4 tsp
காய்ந்த மிளகாய் – 4
உளுந்தம் பருப்பு – 1 1/2 tsp
வேர்க்கடலை – 1 tsp
கடலை பருப்பு – 2 tsp
மிளகு – 8
புளி – சிறிய துண்டு
பெருங்காயத் தூள் – 1/4 tsp
எள் – 1/2 tsp

செய்முறை :

கறிவேப்பிலை சாதம் செய்ய முதலில் பொடி தயாரிக்க வேண்டும். அதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு சூடாறுமாறு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். கருவேப்பிலையை மட்டும் இறுதியாக போடுங்கள். இல்லையெனில் கருகிவிடும்.

பின் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக சாதம் உதிரி உதிரியாக வருமாறு வடித்து ஆற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளியுங்கள். பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.

அதோடு காய்ந்த மிளகாயும் போட்டுக்கொள்ளுங்கள். பின் வடித்த சாதம் சேர்த்து அதில் அரைத்த பொடி மற்றும் உப்பு சேர்த்து பிரட்டுங்கள்.

நன்கு சீராக பிரட்டி எடுத்தால் சுவையான கருவேப்பிலை சாதம் தயார்.

இதை குழந்தைகளுக்கும் கொடுங்கள். கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். அதோடு தலை முடி, சருமப்பராமரிப்பு, இரத்தம் சுத்திகரிப்பு போன்ற எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here