பூசணிக்காய் பச்சடி

0
61

தேவையான பொருட்கள் :

தயிர் – அரை கப்
எண்ணெய் – 1 tsp
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – கால் கப்
கடுகு – 1 tsp
உளுத்தம்பருப்பு – 1 tsp
பெருங்காயத்தூள் – 1/4 tsp
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தே.அ

செய்முறை :

பூசணிக்காயை தோல் நீக்கி கடாயில் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.

வெந்ததும் அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

பச்சை வாசனை போனதும் தனியாக மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம்பருப்பபு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொதிக்கும் பூசணிக்காயில் சேருங்கள்.

தண்ணீர் தேவையான அளவு வற்றியதும் இறக்கிவிடுங்கள். அது நன்கு ஆறியதும் அதில் தயிர், தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிடுங்கள்.

இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள். அவ்வளவுதான் பூசணிக்காய் பச்சடி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here