ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா?

0
14

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
ஊரடங்கு நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here