வாட்ஸ் அப் செயலியில் அடுத்த புதிய அப்டேட்…

0
11

பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ்களை அனுப்புவதற்கு முன்பு அதனை ஒரு முறை உங்களை சரிபார்க்க அனுமதிக்கும். தற்போது நிறுவனம் இந்த புதிய அம்சத்தில் வேலை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு 2.21.12.7-க்கான வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் இந்த அம்சம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது எதிர்காலத்தில் கொண்டுவரவுள்ள அப்டேட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அம்சம் ஏற்கனவே iOS சாதனங்களுக்கான வளர்ச்சியில் உள்ளது என்று WABetaInfo தெரிவித்துள்ளது. இப்போது வாட்ஸ்அப் தளம் Android சாதனங்களிலும் இந்த அம்சத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வாய்ஸ் மெசேஜ்களை மறுஆய்வு செய்வதற்கான விருப்பம் வாட்ஸ்அப்பில் கிடைக்கிறது. ஆனால் அவ்வாறு செய்வதற்கான செயல்முறை மிகவும் சிக்கலானது. இந்த புதிய வாய்ஸ் மெசேஜ் ரிவியூ அம்சம் உங்கள் மெசேஜை மதிப்பாய்வு செய்ய எளிதாக இருக்கும்.

இந்த புதிய வளர்ச்சியின் கீழ் உள்ள அம்சம் யூசர்கள் ஒவ்வொரு முறையும் ஸ்டாப் பட்டனை அழுத்தும்போது அவர்களின் குரல் செய்தியைக் கேட்க அனுமதிக்கும் என்று WABetaInfo குறிப்பிட்டுள்ளது. தற்போது, யூசர்கள் முழு குரல் செய்தியையும் நீக்கும் ரத்து பட்டனை பெறுகிறார்கள். இந்த புதிய அம்சம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் ஸ்டாப் பாட்டனாக மாற்றப்படும் என்று WABetaInfo தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், வாட்ஸ்அப் ஃபாஸ்ட் பிளேபேக் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதில் வாய்ஸ் செய்திகளைப் பெறுபவர்கள் தங்கள் பிளேபேக் வேகத்தை மாற்ற முடியும். இதனால் நீண்ட குரல் செய்திகளைக் கேட்பது பிற யூசர்களுக்கு இன்னும் எளிதாகிறது. செய்தியின் அசல் தன்மையை மாற்றாமல் 1x, 1.5x அல்லது 2x வேகத்தில் வாய்ஸ் மெசேஜை இயக்க இந்த அம்சம் யூசர்களை அனுமதிக்கிறது.

இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இந்த நாட்களில் நாம் காணக்கூடிய எல்லா நேர சேமிப்பு உதவிக்குறிப்புகளும் மற்றும் தந்திரங்களும் தேவை. இதனால்தான் வாட்ஸ்அப்பில் உள்ள குரல் செய்திகள் குறுகிய காலத்திற்கு, பல்பணி அல்லது நண்பர்களைக் கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ள கருவியாக இருக்கிறது. ” என்று தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செய்தி நிறுவனம் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here