சைலன்ட் ஆக BSNL அறிமுகம் செய்த பட்ஜெட் பிளான்!

0
26

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ரூ.499 மதிப்புள்ள ஒரு புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பிராட்பேண்ட் திட்டம் வட்டம் சார்ந்த ஒரு திட்டமாகும், அதாவது குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே அணுக கிடைக்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அந்த வட்டம் – அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகும். மற்றும் குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களையும் பிஎஸ்என்எல் நிறுவனம் திருத்தியுள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்துக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.499 பிராட்பேண்ட் திட்டமானது 10 எம்.பி.பி.எஸ் பதிவிறக்க வேகத்தை 40 ஜிபி வரை வழங்குகிறது.

இந்த திட்டம் புதிய பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு கிடைக்கும், பின்னர் அவர்கள் 150 ஜிபி திட்டத்திற்கு இடம்பெயர்வர். இந்த திட்டம் பற்றிய தகவலை முதலில் கண்டறிந்து அறிக்க்கை வெளியிட்டது கேரளா டெலிகாம் என்பது இங்கே குறிப்பிட்டது.

இப்போது, திருத்தப்பட்ட திட்டங்களுக்கு வருவோம். அனைத்து பிஎஸ்என்எல் பயனர்களும் – புதிய மற்றும் ஏற்கனவே உள்ளவர்கள் – புதிய பிராட்பேண்ட் திட்டங்களுக்கு மாறலாம். நிறுவனத்திடம் ஏழு FTTH மற்றும் ஐந்து DSL பிராட்பேண்ட் திட்டங்கள் உள்ளன.

அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்திற்கான எஃப்.டி.டி.எச் பிராட்பேண்ட் திட்டங்களை பி.எஸ்.என்.எல் திருத்தியது!

அந்தமான் மற்றும் நிக்கோபாரில் உள்ள பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் பிராட்பேண்ட் திட்டங்கள் ஜூன் 1, 2021 முதல் அதிக வேகத்தை வழங்கும்.

எந்தெந்த திட்டம் எம்மாதிரியான பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை வழங்கும் என்கிற விவரங்கள் பின்வருமாறு::

150 ஜிபி, 225 ஜிபி, 300 ஜிபி, 450 ஜிபி, 750 ஜிபி, 1200 ஜிபி மற்றும் 1500 ஜிபி டேட்டாவை வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்கள் முறையே 12 எம்.பி.பி.எஸ், 15 எம்.பி.பி.எஸ், 20 எம்.பி.பி.எஸ், 30 எம்.பி.பி.எஸ், 50 எம்.பி.பி.எஸ், 80 எம்.பி.பி.எஸ் மற்றும் 100 எம்.பி.பி.எஸ் வரை கொடுக்கும்.

இந்த அனைத்து திட்டங்களுக்கும் FUP வரம்புகள் உள்ளன, குறிப்பிட்ட வரம்பை மீறிய பிறகு இணைய வேகம் 512 Kbps, 1 Mbps, 2 Mbps மற்றும் 4 Mbps ஆக குறைக்கப்படும்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்திற்கான டி.எஸ்.எல் பிராட்பேண்ட் திட்டங்களையும் பி.எஸ்.என்.எல் திருத்தியது!

அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஐந்து டி.எஸ்.எல் பிராட்பேண்ட் திட்டங்களை திருத்தியுள்ளது – இனி அனைத்து திட்டங்களும் (300 ஜிபி, 450 ஜிபி, 750 ஜிபி, 1050 ஜிபி மற்றும் 1500 ஜிபி) 10 எம்.பி.பி.எஸ் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை வழங்கும். FUP வரம்பை மீறிய பின்னர், இந்த திட்டங்களின் வேகம் 1 Mbps மற்றும் 2 Mbps ஆக குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here