மே.15-க்கு பின் WhatsApp Call வராது, Notification தெரியாது!

0
18

வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 ஆம் தேதி வெளியிட உள்ளது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த மெசேஜிங் ஆப், புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி அதன் பயனர்களுக்கு நினைவூட்டல்களை அனுப்பி வருகிறது.

அதே சமயம் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கவுண்ட் நீக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ்அப் உங்கள் அக்கவுண்ட்டை நீக்காது, ஆனால் சில அடிப்படை அம்சங்களை மட்டுப்படுத்தும்.

முதலில், கடந்த ஜனவரி மாதத்தில் ஆப் நோட்டிபிக்கேஷன் மூலம் வாட்ஸ்அப் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையைப் பற்றி பயனர்களுக்கு தெரிவித்தது. நிறுவனம் முதலில் புதிய சேவை விதிமுறைகளை பிப்ரவரி 8 ஆம் தேதியன்று தொடங்கவிருந்தது, ஆனால் அதைச் சுற்றியுள்ள தெளிவின்மையைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் தேதியை மே 15 க்கு ஒத்திவைத்தது.

இப்போது, சமீபத்திய தகவல்களின், வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களின் அக்கவுண்ட்டை நீக்காது, ஆனால் சில அடிப்படை அம்சங்களை “மெல்ல மெல்ல” நிறுத்தும்.

தொடர்ச்சியான புதிய தனியுரிமைக் கொள்கை சார்ந்த நினைவூட்டல்களுக்குப் பிறகும் கூட அதை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் சில அடிப்படை அம்சங்களை, அதாவது உள்வரும் அழைப்புகள் அல்லது நோட்டிபிக்கேஷன்ஸ் போன்றவைகளை பெற இயலாமல் போகலாம்.

பின்னர் வாட்ஸ்அப் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் மெசேஜ் மற்றும் அழைப்புகளை நிறுத்தும், பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து மெசேஜ்களை அழைப்புகளை செய்யும் திறனையும் வாட்ஸ்அப் பறிக்கும்.

சிக்னல் ஆப்:

இது தனியுரிமையை மையமாகக் கொண்ட ஒரு மெசேஜிங் ஆப் ஆகும். இதை முன்னாள் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் நிறுவினார். இது வாட்ஸ்அப்பைப் போலவே எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளது.

சிக்னல் நிறுவனம், எந்தவொரு பயனர்களின் தரவையும் சேகரிக்கவில்லை என்றும். பயனர்களை உளவு பார்க்கவில்லை என்றும் உறுதியளிக்கிறது. மேலும் இது பயனர்களின் அடையாளத்துடன் எந்த தரவையும் இணைக்காது.

இது நீண்ட காலமாக வாட்ஸ்அப்பின் போட்டியாளராக அறியப்படுகிறது. இது ஒரு ஓப்பன் சோர்ஸ் மெசேஜிங் ஆப் ஆகும். இது வாட்ஸ்அப்பிற்கு மிகவும் நம்பகமான “மாற்று”களில் ஒன்றாகும்.

டெலிகிராம் அதன் க்ரூப்களில 100,000 மெம்பர்கள் வரை சேர்க்க அனுமதிக்கிறது மற்றும் பயனர்கள் 1.5 ஜிபி வரையிலான கோப்புகளைப் பகிரவும் அனுமதிக்கிறது. Self-destructing messages மற்றும் End-to-end encryption உள்ளிட்ட பல அம்சங்களை இது கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here