ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!!

0
13

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த சட்டமன்ற கட்சிகள் தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமையகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

கூட்டம் தொடங்குவதற்கு முன், முக ஸ்டாலின் முன்னுரை வழங்கினார். அப்போது. கொரோனா முழு ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து கருத்து தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துதல், கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்துவது, அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் இடம் பெறும் வகையில் ஆலோசனைக் குழு அமைத்தல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here