12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும்!!

0
12

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 4,000 பேர் வரை தினசரி உயிரிழக்கின்றனர். தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30,000-த்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்தநிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடித்த பிறகுதான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பாதிப்பின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த ஆண்டைப் போல 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துவந்தது. இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், ‘கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும். 12-ம் வகுப்பு தேர்வு தள்ளிப்போகுமே தவிர ரத்து செய்யப்படாது’ என்று தெரிவித்தார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here