முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் !!

0
8

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை நகரில் பல இடங்களில் ஒரே குடும்பத்தில் 2 பேர், 3 பேருக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் மாநகராட்சி சார்பில் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதே போல் தமிழகத்தின் பல முக்கிய நகரங்களிலும் கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here