பிக்பாஸ் கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று !!

0
30

நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேபிரில்லா. இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். இதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் கேப்ரியல்லாவுக்கு சென்ற வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது..”ஹை ,மக்களே.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் நான் இந்த வாரம் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. உங்கள் அன்புக்கு நன்றி. என்னை நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள், நான் நலமுடன் இருக்கிறேன். தயவு செய்து வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என கூறி உள்ளார்.

“இதுவும் கடந்து போகும். Please stay safe” என அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here