கொரோனாவால் குறைந்த வேலைவாய்ப்புகள்!

0
24

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசி வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வேலைதேடுதல் தளமான நவ்கரி.காம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021 ஏப்ரல் மாதத்தில் நவ்கரி ஜாப்ஸீக் குறியீடு 2,072 ஆகக் குறைந்துள்ளது. இது 2021 மார்ச் மாத அளவை விட 15 சதவீதம் குறைவாகும். ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்புகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் 2020 ஏப்ரல் மாத அளவை விட இது பெரிய பாதிப்பு இல்லை.

தற்போது மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளில் தேவை அதிகமாக இருப்பதால் இந்தத் துறைகளில் வீழ்ச்சி சற்று குறைவாகவே உள்ளது. காப்பீட்டுத் துறையில் 5 சதவீதமும், மருந்துத் துறையில் 9 சதவீதமும், சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் 10 சதவீதமும் வேலைவாய்ப்புகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐடி மென்பொருள் துறையில் 12 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறையில் 15 சதவீதமும், தொலைத் தொடர்புத் துறையில் 15 சதவீதமும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது

2021 மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி கண்டிருந்த ரியல் எஸ்டேட் துறை ஏப்ரல் மாதத்தில் 33 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பல்வேறு இடங்களில் ஊரடங்கு அறிவிப்புகளால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நிதி நெருக்கடி இருப்பதால் வீடு போன்ற சொத்துகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விற்பனை மந்தமாகியுள்ளது. போக்குவரத்து, விருந்தோம்பல், சுற்றுலா, கல்வி, வங்கி மற்றும் நிதிச் சேவைகள் போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் மங்கியுள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here