பிரபுதேவாவால் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய யோசிக்கும் நயன்தாரா?

0
116

டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலித்தது அனைவருக்கும் தெரியும். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள மதம் மாறியதுடன், சினிமாவில் இருந்தும் ஒதுங்கினார் நயன்தாரா.

என் கணவரை நயன்தாரா அபகரித்துவிட்டார் என்று பிரபுதேவாவின் அப்போதைய மனைவி ரம்லத் கொந்தளித்தார். அதன் பிறகு நயன்தாராவும், பிரபுதேவாவும் பிரிந்துவிட்டனர்.

பிரபுதேவாவை பிரிந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது தான் அதன் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள்.

இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்று ரசிகர்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை நயன்தாரா கண்டுகொள்ளவில்லை. காதல் போர் அடிக்கும்போது திருமணம் செய்து கொள்வோம் என்றார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் பிரபுதேவா விஷயத்தால் தான் நயன்தாரா திருமணம் குறித்து ஒரு முடிவுக்கு வராமல் இருப்பதாக பேசப்படுகிறது. திருமதியாக தன் கெரியரை விட்டுக் கொடுக்க அவர் தயாராக இல்லையாம். பிரபுதேவாவின் மனைவியாக ஆசைப்பட்டு அவசர முடிவு எடுத்தது போன்று விக்னேஷ் சிவன் விஷயத்தில் எடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கும் நேரத்தில் திருமண விஷயத்தில் சட்டுபுட்டுனு ஒரு முடிவு எடுக்க நயன்தாரா தயாராக இல்லையாம்.

விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் என்ன போஸ்ட் போட்டாலும், தலைவியை எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வீர்கள் அன்பான இயக்குநரே என்று நயன்தாரா ரசிகர்கள் கேட்கிறார்கள். இந்நிலையில் விஷூ பண்டிகையை கொண்டாட நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனி விமானம் மூலம் கொச்சிக்கு சென்றார்கள்.

விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கொச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர் அநியாயத்துக்கு ஒல்லியாக இருப்பது ரசிகர்களை கவலை அடையச் செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here