18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!!

0
13

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி (மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி அறிமுகம் ஆனது. அப்போது முன்கள பணியாளர்கள், சுகாதாரப் பணியார்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டது. அதன்பின் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரத்தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here