அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!!

0
12

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போட்டப்பட்டு வருகின்றன. முதலில் சுகாதார ஊழியர்களுக்குப் போடப்பட்டது. பிப்ரவரி 2ஆம் தேதி முதல் முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல், மார்ச் 1ஆம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வகை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர், கடந்த 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான முடிவு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கொரோனா பரவல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசி இயக்கத்தின் மூன்றாம் கட்டத்தின் போது நெகிழ்வான விலை நிர்ணயம், கொள்முதல், தகுதி மற்றும் தடுப்பூசிகளின் நிர்வாகம் தொடர்பான பல முடிவுகள் இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்டன. “ஒரு வருடத்திற்கும் மேலாக அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகிறது, அதிகபட்ச எண்ணிக்கையிலான இந்தியர்கள் மிகக் குறைந்த நேரத்தில் தடுப்பூசியைப் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here