ஹீரோ ஆன குக் வித் கோமாளி அஸ்வின், காமெடியன் நம்ம புகழ்!!

0
182

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளிக்கு மக்களிடையே தனி இடம் உண்டு. புகழ் செய்யும் சேட்டைகளை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகிவிட்டார்கள். அதிலும் குறிப்பாக புகழ் தான் கண்டமேனிக்கு பிரபலமாகிவிட்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினின் புகைப்படங்களை பார்த்தவர்களோ, ஹீரோ மாதிரி இருக்கிறீர்களே படங்களில் நடிக்க முயற்சி செய்யலாமே என்று தெரிவித்தனர். விஜய் டிவியில் இருக்கிறார் அதனால் கண்டிப்பாக பெரிய திரைக்கு செல்வார் என நம்பலாம் என்றார்கள் ரசிகர்கள். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. ஆம், அஸ்வின் ஹீரோவாகிவிட்டார்.

டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதுப்படத்தில் அஸ்வின் தான் ஹீரோ. புதுமுகம் ஹரிஹரன் இயக்கும் அந்த படத்தில் புகழ் தான் காமெடி செய்து நம்மை எல்லாம் சிரிக்க வைக்கப் போகிறார்.

இது குறித்து அஸ்வின் கூறியிருப்பதாவது,

எனக்குள் நான் ரொம்ப வருஷமா கேட்டுக்கிட்டு இருந்தது, கனவு, பல நாள், பல வருஷம் இதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எப்போ ஒரு படத்துக்கு நான் ஹீரோவா நடிக்கப் போகிறேனு சொல்லிட்டு. இந்த ஷோக்கு அப்புறம் எல்லாரும் கேட்டுக்கிட்டே இருந்தீங்க. எப்போ வரப் போகுதுனு. அதற்கான விடை எனக்கு தெரியும். ஏனென்றால் இன்று நான் ஒரு படம் சைன் பண்ணியிருக்கிறேன். அந்த கம்பெனி ட்ரைடன்ட் ஆர்ட்ஸ், டைரக்டர் பெயர் ஹரிஹரன். புது டைரக்டர். ஒரு நல்ல ஸ்க்ரிப்ட்டோட ஒரு நல்ல ஃபீல் குட் படமாக கொடுக்கப் போகிறார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உங்களுக்கு பிடித்த ஒருவர் இதில் இருக்ககப் போகிறார். எனக்கு பிடித்த ஒருவர் இருக்கப் போகிறார். அது யாருன்னா புகழ் என்றார்.

புகழ் கூறியதாவது,

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதுவும் மச்சான் ஹீரோவாக நடிக்கிறான். வேற லெவலில் பயங்கர ஹேப்பியாக இருக்கிறது. என்ன தான் குக் வித் கோமாளியில் காமெடி செய்தாலும் ஒரு ஹீரோ, காமெடியனாக எங்களால் முடிந்த என்டர்டெயின்மென்ட் கொடுப்போம். பார்த்து ரசிங்க என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here