இனிமே எத்தனை Likes-னு பார்க்கவும் முடியாது!!காட்டவும் முடியாது!!

0
20

பேஸ்புக்கிற்கு சொந்தமான போட்டோ மற்றும் வீடியோ பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது, இது பயனர்கள் தங்கள் போஸ்டில் இருந்து லைக்ஸ் எண்ணிக்கையை மறைக்க அனுமதிக்கும்.

டெக் க்ரஞ்ச் வலைத்தளத்தின் அறிக்கையின்படி, இந்த அம்சம் பயனர்கள் மற்ற பயனர்களின் போஸ்ட்களில் விருப்பங்களைப் பார்க்க விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தேர்வுசெய்யவும் அனுமதிக்கும்.

இன்ஸ்டாகிராம் இந்த அம்சத்தை சோதிப்பது இது முதல் முறை அல்ல. நினைவூட்டும் வண்ணம், கடந்த 2019 ஆம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுடன் இதே அம்சத்தை சோதிக்கத் தொடங்கியது.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இன்ஸ்டாகிராம் மற்ற மிக முக்கியமான அம்சங்களில் தங்கள் கவனத்தை நகர்த்தியது.

முன்னதாக இந்த hide likes அம்சம் மற்ற பயனர்களுக்கு லைக்ஸ் எண்ணிக்கையைக் காட்ட வேண்டுமா இல்லையா என்பதை மட்டுமே தேர்வுசெய்ய அனுமதித்தது.

இப்போது, இந்த அம்சம் பயனர்கள் தங்கள் லைக்ஸ்களை பார்க்க வேண்டுமா வேண்டாமா மற்றும் அதே எண்ணிக்கையை மற்றவர்களுக்கு காட்ட வேண்டுமா வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும்

பேஸ்புக் தனது சொந்த சமூக ஊடக தளத்திற்கும் இதே போன்ற அம்சத்தை சோதிக்கும் என்றும் டெக் க்ரஞ்ச் அறிக்கை குறிப்பிடுகிறது.

இன்ஸ்டாகிராமின் படி, இந்த அம்சம், எப்போதுமே மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே லைக்ஸ் கிடைக்கிறது என்கிற கவலை மற்றும் சங்கடத்தை அனுபவிக்கும் பயனர்களை ‘Feel Good’ செய்ய வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வகையான சிக்கல் பெரும்பாலும் இளைய பயனர்களிடம்தான் உள்ளது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சோதனை வழியாக பயனர்களிடமிருந்து பெறப்பட்ட Feedback மூலம், எல்லா பயனர்களும் போஸ்ட்டில் இருந்து லைக்ஸ்-களை மறைக்கும் யோசனையுடன் உடன்படவில்லை. தங்கள் பேஜ் மற்றும் ப்ரொபைலிற்கான செல்வாக்கை மற்ற பயனர்கள் நிர்ணயம் செய்ய பேஜ் லைக்ஸ் மற்றும் போஸ்ட் லைக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், நீங்கள் யோசனையை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த அம்சம் தற்போது இன்ஸ்டாகிராமில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. எப்போது “பொதுவெளிக்கு” அறிமுகமாகும் என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here