கர்ணன் விமர்சனம்

0
198
நடிகர்கள்:

தனுஷ்,ரஜிஷா விஜயன்,லால்,யோகி பாபு

இயக்கம்: மாரி செல்வராஜ்

சினிமா வகை:Drama

ஒரு இளம் பெண் வலிப்பு வந்து நடுரோட்டில் துடிப்பதுடன் கர்ணன் படம் துவங்குகிறது. அந்த சாலை வழியாக செல்லும் ஒரு வாகனம் கூட நிற்கவில்லை. கேமரா ஆங்கிள் மேலே, மேலே சென்று கடவுளின் பார்வையில் அந்த காட்சியை காட்டுகிறது. கடவுளும் காப்பாற்றாமல் அந்த பெண் இறந்து தெய்வமாகிவிடுகிறார்.

அதன் பிறகு கண்டா வரச் சொல்லுங்க பாடல் வருகிறது. கர்ணன்(தனுஷ்) திரும்பி வர வேண்டும் என்று மொத்த கிராமமும் பிரார்த்தனை செய்வதை பார்க்க முடிகிறது. உடனே கர்ணனை காட்டுகிறார்கள். ஆனால் அவரின் முகம் தெரியவில்லை. ரத்தக்கறை படிந்த பாதங்கள், விலங்கிடப்பட்ட கைகள், கருப்புத் துணியாமல் மூடப்பட்ட தலை தான் தெரிகிறது. அந்த ஓவியரின் கலையில் தான் கர்ணனை பார்க்க முடிகிறது.

உடனே ஒரு பிளாஷ்பேக். 1997ம் ஆண்டில் கதை நடக்கிறது. கர்ணன் எப்படி மக்கள் கொண்டாடும் ஹீரோவானார் என்பதை காட்டுகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழும் கிராமம் பொடியன் குளம். அங்கு பேருந்து கூட நிற்காது. பக்கத்து கிராமமான மேலூரை சேர்ந்த உயர் சாதியினர் பொடியன் குளம் மக்களை ஒடுக்கி வைத்துள்ளனர்.

ராணுவத்தில் தேர்வாக காத்திருக்கும் கோபக்கார வாலிபரான பொடியன் குளத்தை சேர்ந்த கர்ணன் தன் மக்களுக்காக போராட முடிவு செய்யும்போது கதை சூடுபிடிக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும் இடையேயான மோதல் என்கிற பழைய கதை போன்று தெரிந்தாலும், மாரி செல்வராஜின் வித்தியாசமான அணுகுமுறையால் படம் தனித்து தெரிகிறது.

முதல் பாதியில் அவசரமே படாமல் தன் கதாபாத்திரங்களை அழகாக காட்டியிருக்கிறார். பொடியன் குளம் மக்களுக்காகவும், அவர்களின் போராட்டத்திற்காகவும் நம்மை கவலைப்பட வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

தனுஷ் நடிப்பை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. கர்ணனாகவே மாறிவிட்டார். லால், ரஜிஷா விஜயன், லக்ஷ்மிப்ரியா, நட்டி, யோகி பாபு ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கர்ணன்- கண்டிப்பாக கொண்டாட வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here