டெடி விமர்சனம்

0
53
நடிகர்கள்:

ஆர்யா,சயீஷா

இயக்கம்: சக்தி சௌந்தர்ராஜன்சினிமா வகை:Action, Thriller

வித்தியாசமான கதையை படமாக்குவதற்கு பெயர் போன சக்தி சௌந்தர்ராஜன் டெடி படம் மூலம் மீண்டும் வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார். உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியாவால் ஸ்ரீ(சயீஷா) கடத்தப்படுவதுடன் படம் துவங்குகிறது.

அவருக்கு மருந்து செலுத்திய பிறகு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார். அதன் பிறகு சயீஷாவின் ஆத்மா ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது. நம்ப முடியவில்லை தான், ஆனால் படத்தில் அப்படித் தான் காட்டியிருக்கிறார்கள். அந்த டெடி பொம்மை ஓசிடி மற்றும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளும் திறன் கொண்ட சிவாவுடன்(ஆர்யா) நட்பாகி ஸ்ரீ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்கிறது.

புதுமையான கதையை திரையில் காட்டுவது சாதாரண விஷயம் அல்ல. அதில் இயக்குநருக்கு முழு வெற்றி கிடைக்காவிட்டாலும் அவரின் முயற்சியை பாராட்ட வேண்டும். டெடி பொம்மை செய்யும் காரியங்கள், அதற்கும் ஆர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது. கதை இப்படியே ஜாலியாக செல்லாது சீரியஸாகிவிடும் என்று தெரிந்தும் ரசிக்க வைக்கிறது.

எதிலும் வல்லவர் என்று ஆர்யாவை காட்டியிருப்பது பல இடங்களில் பொருத்தமாக இருந்தாலும் சில இடங்களில் ஏற்கும்படி இல்லை. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் காட்சிகள்.

ஆர்யா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இமானின் இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. டெடி கதாபாத்திரத்திற்கான விஎஃப்எக்ஸ் பணியை பாராட்ட வேண்டும். ஆர்யாவை தவிர பிற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. ஹீரோவின் நண்பனாக நடித்திருக்கும் சதீஷ் இதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் என்ன செய்தாரோ அதையே தான் மீண்டும் செய்திருக்கிறார். கருணாகரனின் கதாபாத்திரம், வில்லன் மகிழ் திருமேனியின் கதாபாத்திரம் பெரிதாக கவரவில்லை. ஆர்யா, சயீஷா இடையேயான எமோஷனல் காட்சிகள் ஓரளவுக்கு கை கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here