தமிழகத்தில் உலகிலேயே மிகப்பெரிய ஆலை… 10000 பேருக்கு வேலைவாய்ப்பு!

0
36

ஓலா நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன ஆலையை தமிழகத்தில் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஓலா கையெழுத்திட்டது.

ஜனவரி மாதம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த ஆலைக்காக ஓலா நிறுவனம் 2,400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஆலை கட்டமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் முதல்கட்ட ஆலையில் உற்பத்தி தொடங்கும் என ஓலா தெரிவித்துள்ளது.

முதல்கட்ட உற்பத்தி தொடங்கியவுடன் ஆரம்பத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய முடியும் என ஓலா தெரிவித்துள்ளது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசிய நாடுகள், பசிபிக் நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த ஆலையால் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, ஆலையில் 5000 ரோபோக்களும் பணியில் அமர்த்தப்பட இருக்கின்றன. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எடெர்கோ நிறுவனத்தை கடந்த ஆண்டு ஓலா வாங்கியது. இந்நிறுவனத்தின் மாடல்களை அடிப்படையாக கொண்டு எலெக்ட்ரிஸ் ஸ்கூட்டர்களை ஓலா தயாரிக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here