ஆட்ட நாயகன் விருதுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி!!

0
21

பெட்ரோல் விலை ரூ.100-ஐ ஏற்கெனவே ஓரிரு நகரங்களில் தொட்டு விட்டது. 4 மெட்ரோ நகரங்களிலும் இன்னும் கொஞ்ச நாளில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.100 என்ற இமாலய விலையை பெட்ரோல் எட்டிவிடும்.

எல்.பி.ஜி. சிலிண்டர் விலை நேற்று ரூ.25 ஏற்றப்பட்டது, இன்று ரூ.14 ஏற்றப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பினால் நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது, காய்கறிகள் உட்பட அனைத்தும் விலை எகிறிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் நாடு முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஆளும் பாஜக-வினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்துள்ளன, பொதுமக்களும் ட்விட்டர் போன்ற தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சில கோபாவேசப்பதிவுகளை வெளியிட மற்றவர்கள் நகைச்சுவை மீம்களை வாரிக்குவித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கரூரில் திருக்குறள் கூறினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று பங்க் உரிமையாளர் ஒருவர் அறிவித்தது பரபரப்பானது. வரவேற்பு பெற்றது. இந்த பெட்ரோல் பங்க் அரவக்குறிச்சியில் உள்ளது, ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தப்பில்லாமல் திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது.

அதே சமயத்தில் சமூக ஊடகங்களில் பெட்ரோல் பங்க் ஒன்றில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை ஹெல்மெட் சகிதம் நிற்பதாக ஒரு புகைப்படம் வளையவந்தது. அதாவது இந்த நபர் தான் சதம் அடித்தது போல் போஸ் கொடுத்தார், அதாவது பெட்ரோல் விலை சதமடிப்பதை கிண்டலாக சித்தரித்திருந்தார் அவர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் கிரிக்கெட் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர் ஒருவருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக அளிக்கப்பட்டது.

ஞாயிறன்று இந்தப் போட்டி நடந்தது, 5லிட்டர் பெட்ரோலை ஆட்ட நாயகன் விருதுக்கு பரிசாக வென்ற அதிர்ஷ்டசாலி பெயர் சலாவுதீன் அப்பாஸி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here