மேக் இன் இந்தியா ஆண்ட்ராய்டு டிவி வெளியிடும் ஐடெல்

0
18

ஐடெல் நிறுனம் இந்திய சந்தையில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டும் ஐடெல் ஆண்ட்ராய்டு டிவிக்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

அந்த வரிசையில் இந்த ஆண்டும் புது டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஐடெல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆண்ட்ராய்டு டிவிக்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

சமீபத்திய ஆய்வுகளில் நம்பத்தகுந்த பிராண்டுகள் பட்டியலில் ரூ 5 முதல் 7 ஆயிரம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ஐடெல் இடம்பெற்று இருக்கிறது. டிவிக்களை பொருத்தவரை புது ஐடெல் மாடல்களில் பிரேம்லெஸ் பிரீமியம் ஐடி டிசைன், அல்ட்ரா-பிரைட் டிஸ்ப்ளே, தரமான ஆடியோ அனுபவம் மற்றும் டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கலாம்.

புதிய டிவி மாடல்கள் 32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் அதிக அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இந்தியாவில் இதன் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

ஐடெல் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் எம்ஐ, ரியல்மி மற்றும் டிசிஎல் பிராண்டு டிவிக்களுக்கு போட்டியாக அமைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here