தேவையான பொருட்கள் :
பீன்ஸ் – 1 கப்
முட்டை – 6
வெங்காயம் – 1
சீரகம் – 1 tspகடுகு – 1tsp
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 tsp
உப்பு – தே.அ
செய்முறை :
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
மிளகு, சீரகம் இரண்டையும் இடித்து பேஸ்டாக்கி அதை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் முட்டை ஊற்றி பிரட்டவும். தீயை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.