சங்கரன்கோவிலில் வீட்டில் தனியாக விளையாடி கொண்டு இருந்த இரண்டரை வயது சிறுவன் தலைகீழாக தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த ஜெபாஸ்டியன் – எஸ்தர் தம்பதியினரின் மகன் ஆரோன். குழந்தையின் பெற்றோர் இருவரும் குழந்தையை அருகில் உள்ள வீட்டில் உறவினர்களிடம் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டு வாசல் முன்பு ஆரோன் விளையாடி கொண்டு இருந்துன்னான். அப்போது எதிர்பாராத விதமாக வாசலில் தண்ணீருடன் இருந்த பக்கெட்டை குழந்தை எட்டி பார்த்த போது தவறி உள்ளே தலைகீழாக விழுந்துள்ளான்.
இதில் குழந்தையின் கழுத்து வரை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனை, அங்கிருந்தவர்கள் கவனிக்க வில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில், சிறிது நேரம் கழித்து அருகில் விளையாடி கொண்டு இருந்த குழந்தைகள் குழந்தையை காணவில்லை என் பார்த்தபோதுதான் தண்ணீரில் பக்கெட்டில் விழுந்ததை கவனித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை மூச்சு திணறி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனை அடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விளையாடி கொண்டிருந்த குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.