தமிழ்நாட்டில் இன்று 540 பேருக்கு கொரோனா..

0
20

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,35,280 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 26 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 4,813 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 230346 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 224626 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4086 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54077 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 52943 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 669 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51295 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50141 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 763 பேர் பலியாகியுள்ளனர்.

அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று ஒருத்தருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4676 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55,710 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,53,86,02 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 627 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,18,147 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,320 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here