தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா..!

0
19

தமிழகத்தில் இன்றைய (22-01-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 574 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,33,585 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 26 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 155 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 229860 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 223986 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4084 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 229860 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 52738 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 666 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51160 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50020 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 762 பேர் பலியாகியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்குகூட கொரோனா உறுதியாகவில்லை. இதுவரை இங்கு 2260 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2238 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே இங்கு சிகிச்சையில் உள்ளார்.

அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4672 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 61,922 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,52,05,061 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 689 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,16,205 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,307 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here