Amazon, Flipkart-இல் மிஸ் பண்ணவே கூடாத ஆபர்கள்!!

0
20

பிரபல இகாமர்ஸ் தளங்களாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே தங்கள் குடியரசு தின சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றன.

அமேசானின் கிரேட் குடியரசு தின சிறப்பு விற்பனை மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையானது பல பிரபலமான மொபைல் போன்களின் மீது பல வகையான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.

அவைகளில் எதெல்லாம் உண்மையாகவே சூப்பரான ஆபர்கள் என்பதை கண்டறிய உங்களுக்கு அதிக நேரம் எடுக்கலாம். அந்த சிரமத்தை குறைக்கவே இக்கட்டுரை!

இந்த வாரம், மொபைல் போன்களின் மீது அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் சிறந்த ஒப்பந்தங்களை நாங்கள் தேர்ந்தெடுத்து, பட்டியலிட்டுள்ளோம். இந்த இரண்டு ஆன்லைன் சந்தைகளுமே தொகுக்கப்பட்ட எக்ஸ்சேன்ஜ் மற்றும் பேமண்ட் சலுகைகளை வழங்குகின்றன.

அவைகள் ஒரு ஸ்மார்ட்போனின் இறுதி விலையை இன்னும் குறைக்கின்றன. ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் அல்லது சற்றே மேம்படுத்த ஸ்மார்ட்போனை சொந்தமாக்க நினைத்தால், இதோ நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட். முதலில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சிறப்பு விற்பனையில் நீங்கள் மிஸ் பண்ண கூடாத மொபைல் போன் ஆபர்களை பற்றி பார்ப்போம்:

ஆப்பிள் ஐபோன் 11 64 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.48,999

ஆப்பிளின் ஐபோன் 11 (64 ஜிபி) மாடல் இந்த வாரம் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது ரூ. 48,999 க்கு வாங்க கிடைக்கும்.இதன் அசல் விலை ரூ.54,900 ஆகும். பிளிப்கார்ட் ஒரு எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் தொகுத்து வருகிறது, இது ஸ்மார்ட்போனின் விலை இன்னும் ரூ.16,500 ஆக குறைக்கும். மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது. ஐபோன் 11 மாடலின் அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.1 இன்ச் Liquid Retina டிஸ்பிளே

ப்ராசஸர்: ஆப்பிளின் புதிய A13 Bionic chip

பேட்டரி ஆயுள்: iPhone XR-ஐ விட ஒரு மணி நேரம் அதிக பேட்டரி ஆயுள்.

ஐபோன் 11 ஆனது அதன் பின்பக்கத்தில் டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது எஃப் / 1.8 மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 மெகாபிக்சல் அளவிலான வைட்-அங்கிள் லென்ஸ் + எஃப் / 2.4 மற்றும் 120- டிகிரி ஃபீல்ட் கொண்ட 12 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இதன் புதிய கேமரா மென்பொருள் அம்சங்களில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட் எச்டிஆர், மேம்படுத்தப்பட்ட நைட் மோட் மற்றும் மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெயிட் மோட் ஆகியவைகள் உள்ளன. மேலும் இதன் இரட்டை பின்புற கேமராக்கள் ஆனது 4கே வீடியோ பதிவை 60fps இல் ஆதரிக்கின்றன மற்றும் ஐபோன் எக்ஸ்ஆரில் உள்ளதை விட 36 சதவீதம் பிரகாசமான ஃபிளாஷ் மூலம் இணைக்கப்படுகின்றன.

ஐபோன் 11-ல் உள்ள முன் பக்க கேமராவும் ஐபோன் எக்ஸ்ஆர் உடன் ஒப்பிடும் போது ஒரு படி மேலே உள்ளது. ஐபோன் 11-ல் ஒரு 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது, இது 4கே மற்றும் ஸ்லோ-மோ வீடியோக்களை படம்பிடிக்கும் திறனை கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 64 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.31,999

பிளிப்கார்ட்டில் ஐபோன் எஸ்இ (64 ஜிபி) மாடலானது, இந்த வாரம் நடக்கும் சிறப்பு விற்பனையின் போது ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.39,900 ஆகும். எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைதாரர்கள் ரூ.3,000 என்கிற தள்ளுபடியை பெற்று, இதை ரூ.28,999 க்கு வாங்கலாம்.தவிர தொகுக்கப்பட்ட எக்ஸ்சேன்ஞ் சலுகையின் கீழ் பழைய ஸ்மார்ட்போனை மாற்றுவதன் மூலம் ரூ.16,500 என்கிற தள்ளுபடியையும் பெறலாம்.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 ஆனது 4.7 இன்ச் ரெடினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 750×1334 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. டிஸ்ப்ளே பேனலில் புதிய ஐபோன் மாடல்களில் காணப்படும் ஹாப்டிக் டச் ஆதரவு உள்ளது.

இது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருக்கும் ஏ 13 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய ஐபோனின் பின்புறத்தில் ஒற்றை 12 மெகாபிக்சல் கேமரா சென்சார் (எஃப் / 1.8 துளை) உள்ளது, உடன் ஸ்லோ சின்க் கொண்ட எல்இடி ட்ரூ டோன் ஃபிளாஷூம் உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக, முன்பக்கத்தில் 7 மெகாபிக்சல் அளவிலான கேமரா (எஃப் / 2.2)உள்ளது.

ஐபோன் எஸ்இ 2020 -இல் உள்ள இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ax, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் லைட்னிங் போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த புதிய ஐபோன் டச் ஐடி பொத்தானைக் கொண்டுள்ளது. சமீபத்திய அம்சமான ஃபேஸ் ஐடியை கொண்டிருக்கவில்லை, ஏனெனில் அதற்கு சிறப்பு சென்சார்கள் தேவை.

வடிவமைப்பு வாரியாக, ஐபோன் எஸ்இ 2020 ஆனது கடந்த 2017 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 7 இன் வாரிசான ஐபோன் 8 போலவே இருக்கிறது. அளவீட்டில் இது 138.4×67.3×7.3 மிமீ மற்றும் 148 கிராம் எடையும் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் – ரூ.44,999

சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் மீண்டும் ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.83,000 ஆகும். தவிர எக்சேன்ஞ் சலுகையின் கீழ் உடனடி தள்ளுபடியாக ரூ.16,500-ஐ பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் ஆனது கேலக்ஸி எஸ் 20 அம்சங்களுடன் மிகவும் ஒத்திருக்கிறது, ஆனால் அளவு, பேட்டரி திறன் ஆகியவற்றில் வேறுபடுகிறது. மேலும் கூடுதல் பின்புற கேமராவையும்கொண்டுள்ளது. அளவீட்டில், கேலக்ஸி எஸ் 20 பிளஸ் ஆனது 161.9×73.7×7.8 மிமீ மற்றும் 186 கிராம் (5 ஜி மாறுபாட்டிற்கு 188 கிராம்) எடையும் கொண்டுள்ளது. இது சற்று பெரிய, 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

எல்.டி.இ பதிப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது, 5 ஜி வேரியண்ட்டில் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்கள் உள்ள. தவிர இதன் பின்புற கேமரா அமைப்பில் கூடுதலாக டெப்த் சென்சார் சேர்ப்பதைத் தவிர, மற்ற முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்கள் ஆனது கேலக்ஸி எஸ் 20 மாடலில் இருப்பது போலவே அப்படியே இருக்கின்றன. எஸ் 20 பிளஸ் மாடலின் டிஸ்ப்ளேவைப் பொறுத்தவரை, நீங்கள் 6.7 இன்ச் கியூஎச்டி (1,440×3,200 பிக்சல்கள்) டைனமிக் அமோலேட் 2 எக்ஸ் டிஸ்ப்ளேவைப் பெறுவீர்கள், இதன் பிக்சல் எண்ணிக்கை 525 பிபி ஆகும் மற்றும் இது ஒரு இன்ஃபினிட்டி-ஓ ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ் 3 – ரூ.14,999

முன்னதாக நடந்த பிளிப்கார்ட் முந்தைய விற்பனையை நீங்கள் தவறவிட்டு இருந்தால், போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனை (6 ஜிபி, 64 ஜிபி) தள்ளுபடி விலையில் வாங்க மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் இப்போது ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.19,999 ஆகும்.

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட போக்கோவிற்கான எம்ஐயுஐ 12 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080×2,340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்துடன் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பளிங் விகிதம் மற்றும் எச்டிஆர் 10 சான்றிதழ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது.

புதிய போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி எஸ்ஓசி, அட்ரினோ 618 ஜி.பீ.யூ மூலம் இயக்கப்படுகிறது, இதில் 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உள்ளது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

அதில் 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 682 முதன்மை சென்சார் (எஃப் / 1.73 லென்ஸ்) + 13 மெகாபிக்சல் 119 டிகிரி வைட் ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்) + எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவைகளை கொண்டுள்ளது.

முன்புறத்தில், எஃப் / 2.2 லென்ஸுடன் 20 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது ஹோல் பஞ்ச் கட் அவுட் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஆன் போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியது (256 ஜிபி வரை). இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது வைஃபை, ப்ளூடூத், 4 ஜி, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 ஒரு பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது மற்றும் இது 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆன்-போர்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, ஆக்ஸலரோமீட்டர், கைரோஸ்கோப், ஆம்பியண்ட் லைட் சென்சார், மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக ஐபி 53 சான்றளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அளவீட்டில் 165.3×76.8×9.4 மிமீ மற்றும் 215 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 5 ஜி – ரூ.18,999

புதிய மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்குகிறது மற்றும் 6.7 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080×2,400 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா (எஃப் / 1.7) + 8 மெகாபிக்சல் செகண்டரி வைட்-ஆங்கிள் சென்சார் (எஃப் / 2.2 + 118 டிகிரி பீல்ட் ஆப் வியூ) + 2 மெகாபிக்சல் (எப் / 2.4) மேக்ரோ சென்சார் ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை (எஃப் / 2.2) கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போன் தூசி பாதுகாப்புக்காக ஐபி 52 சான்றிதழை பெற்றது.மேலும் மைக்ரோ எஸ்.டி கார்டைப் பயன்படுத்தி 1TB வரை விரிவாக்கக்கூடிய விருப்பத்துடன் 128 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போனின் மொத்த அமைப்பும் 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி இதன் பேட்டரி ஆயுள் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்.

மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 5 ஜி, என்எப்சி, ப்ளூடூத் 5.1, வைஃபை 802.11 ஏசி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது. இது அளவீட்டில் 166x76x10 மிமீ மற்றும் 212 கிராம் எடையும் கொண்டுள்ளது.

எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்க்ரீன் – ரூ.44,990

எல்ஜி வெல்வெட் ஒரு தனித்துவமான 3D ஆர்க் வடிவமைப்பு மற்றும் சற்று வளைந்த விளிம்புகளை கொண்டுள்ளது. மேலும் இது 6.8 இன்ச் அளவிலான முழு எச்டி+ சினிமா ஃபுல்விஷன் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை (2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20.5: 9 விகிதம்) கொண்டுள்ளது.

5ஜி ஆதரவு கொண்ட இதன் டிஸ்ப்ளேவில் வாட்டர் டிராப் நாட்ச் டிசைனும் உள்ளது. இது 2.4Ghz அட்ரினோ 620 ஜி.பீ.யு உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

இது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் (அவுட் ஆப் பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது. மேலும் இது 4,300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 10W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கும் துணைபுரிகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது, இது மைக்ரோ எஸ்.டி உடன் 2 டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது.

கேமராத்துறையை பொறுத்தவரை, இது ஒரு வாட்டர் டிராப் ரியர் கேமரா வடிவமைப்போடு வருகிறது, அதாவது பின்புற கேமராக்கள் வாட்டர் டிராப்புகள் போல ஒன்றின் கீழ் ஒன்று அமைக்கப்பட்டுள்ளன.

பின்புறத்தில் இருப்பது ஒரு ட்ரிபிள்-கேமரா அமைப்பு ஆகும். அதில் 48 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆனது ஐபி 68 மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி 810 ஜி சான்றிதழ்களைக் கொண்டுள்ளது, மேலும் இது தனது சொந்த எல்ஜி டூயல் டிஸ்பிளே பதிப்பையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் பாதுகாப்பிற்கு டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளார் மற்றும் 4096 ப்ரெஷர் லெவல்ஸ் கொண்ட Wacom ஸ்டைலஸ் ஆதரவும் இதில் உள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, என்எப்சி, ப்ளூடூத், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 167.2×74.1×7.9 மிமீ மற்றும் 180 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இப்போது அமேசானின் குடியரசு தின சிறப்பு விற்பனையில் நீங்கள் மிஸ் பண்ண கூடாத மொபைல் போன் ஆபர்களை பற்றி பார்ப்போம்:

ஆப்பிள் ஐபோன் 12 மினி – ரூ. 64,490

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here