ஜன.20 – 24 வரை; பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்

0
25

பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வருகிற ஜனவரி 20 முதல் Big Saving Days sale என்கிற சிறப்பு விற்பனையை நடத்தவுள்ளது. இது பிளிப்கார்ட் நிறுவனம் இந்த 2021 ஆண்டின் நடத்தும் முதல் மிகப்பெரிய விற்பனையாகும், இது பல்வேறு வகையிலான தயாரிப்புகளின் மீது தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கவுள்ளது.

இதற்காக பிளிப்கார்ட் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் கூட்டு சேர்ந்து அனைத்து தயாரிப்புகளுக்கும் 10% உடனடி தள்ளுபடியையும் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு பிளிப்கார்ட் விற்பனையையும் போலவே, இதுவும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது ஜனவரி 19 ஆம் தேதி காலை 12 மணி முதலே அணுக கிடைக்கும்.

இந்த விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி அனைத்து நுகர்வோருக்கும் அணுக கிடைக்கும். மேலும் இது ஜனவரி 24 வரை தொடரும்.

இந்த சிறப்பு விற்பனைக்கு முன்னதாக, பிளிப்கார்ட் அதன் மேடையில் நுகர்வோர்கள் பெறக்கூடிய சில சலுகைகளையும் தள்ளுபடியையும் டீஸ் செய்துள்ளது. அதன் வழியாக வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எந்த மாதிரியான சலுகைகளைப் பெறும் என்பதற்காக முன்னோட்டம் நமக்கு கிடைக்கிறது.

ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் இந்த விற்பனையின் போது சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்னம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999 ஆகும்.

இதேபோல கேலக்ஸி ஏ 21 எஸ், கேலக்ஸி ஏ 31 மற்றும் கேலக்ஸி ஏ 71 ஆகியவைகள் முறையே ரூ.13,999, ரூ.16,999 மற்றும் ரூ.20,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும்.

மேலும் சாம்சங் கேலக்ஸி நோட் 10+ மற்றும் கேலக்ஸி எஸ் 20 + ஆகியவற்றை நடக்கவுள்ள பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது ரூ.49,999 என்கிற ஆரம்ப விலைக்கு வாங்கலாம்.

ஆப்பிளின் ஐபோன் மாடல்களும் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் சலுகைகளை பெறவுளள்ன. ஐபோன் எஸ்இ மாடலானது இருப்பதிலேயே மிகக்குரியந்த ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை ஒருவர் ரூ.35,999 என்கிற ஆரம்ப விலைக்கு வாங்கலாம்.

போக்கோ ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, இந்த விற்பனையின் போது போக்கோ எக்ஸ் 3, போக்கோ எம் 2 ப்ரோ மற்றும் போக்கோ சி 3 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.14,999, ரூ.11,999 மற்றும் ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கும்.

மேலும் இந்த பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.18,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் விற்பனைக்கு வரும்.

பிரீமியம் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, ஆசஸ் ROG போன் 3 ஆனது ரூ.43,999 க்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எல்ஜி ஜி 8 எக்ஸ் மீண்டும் ஆபருக்குள் வந்துள்ளது, இந்த முறை இது ரூ.25,990 என்கிற தள்ளுபடியை பெறுகிறது. கடைசியாக iQoo 3 5G ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.34,990 க்கு வாங்க கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here