மொறு மொறு வாழைப்பூ வடை

0
22

முக்கிய பொருட்கள்

 • 1 Numbers வாழை பூ
 • 1 கப் நறுக்கிய வெங்காயம்
 • தேவையான அளவு உப்பு

பிரதான உணவு

 • 1 கப் இரவு ஊறவைத்த கடலை பருப்பு
 • 3 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
 • 1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை
 • 4 Numbers நறுக்கிய பச்சை மிளகாய்
 • தேவையான அளவு சிவப்பு மிளகாய்
 • தேவையான அளவு கறிவேப்பிலை
 • 8 cloves பூடு
 • 1 1/2 தேக்கரண்டி சீரக விதைகள்

செய்முறை

ஊறவைத்த கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் வெள்ளைப் பூண்டு மூன்றையும் மிக்ஸியில் வைத்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வாழைப் பூவை ஆய்ந்து சுத்தம் செய்து பூவில் இருக்கும் மெல்லிய நரம்புகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்த தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளவும்.

அரைத்த கடலைப்பருப்பு விழுதுடன் நறுக்கிய வாழைப்பூக்களையும் சேர்த்து நன்றாக ஒன்றுடன் ஒன்று சேறும்படி பிசைந்து கொள்ளுங்கள்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். இப்பொழுது கொஞ்சம் மாவை எடுத்து வடை மாதிரி தட்டிக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் பொரித்துப் பொன்னிறமாக வேகவைத்து எடுங்கள். மிதமான சூட்டில் பொன்னிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.
மொறு மொறு வாழைப்பூ வடை ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here