ஆஸ்திரேலியாவை தட்டி தூக்கிய இந்தியா…

0
28

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி கான்பீரா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20-ல் தனது முதல் போட்டியில் அவர் இன்று விளையாட உள்ளார். மேலும் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் அணியில் இடம் பெற்றனர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஷிகார் தவான் களமிறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கம் பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. ஷிகார் தவான் 1 ரன்னில் அவுட்டாக அடுத்த வந்த கேப்டன் விராட் கோலி 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

சஞ்சு சாம்சன் 23, மனிஷ் பாண்டே 2, ஹர்டிக் பாண்டியா 16 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மட்டும் பொறுப்புடன் விளையாடி 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதி ஓவர்களில் அபாராமாக விளையாடிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணிறியது.

ஃபின்ச் 35 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 12 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். ஆட்டத்தின் போக்கை அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல்லை 2 ரன்னில் அவுட்டாக்கி சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினர் நடராஜன்.

ஆஸ்திரேலிய ரன் குவிப்பை இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களையும் வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு விலகியதால் அவருக்கு பதில் மாற்று வீரராக களமிறங்கிய சஹால் அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

மற்றொரு அறிமுகப் போட்டியில் மிரட்டிய யார்க்கர் மன்னன் நடராஜன் தன்பங்கிற்கு 3 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை திணறவிட்டார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த டி20 போட்டி வரும் 6-ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here