வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் !!

0
19

உலகில் உள்ள முன்னணி சமூக வலைத்தளங்களில் வாட்ஸ் அப்பும் ஒன்று. தற்போது அதிகளவு பயனாளர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். மெசேஜ் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த ஆப்ஸ்க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது. பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய அம்சங்கள் அடங்கிய அப்டேட்களை அறிமுகம் செய்து வாட்ஸ்அப் நிறுவனம் அசத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டு வரும் புதிய வசதிகள் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. 

பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் தற்போது வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில், தனிப்பயன் வால்பேப்பர்கள் (custom wallpapers), ஒளி மற்றும் இருண்ட தளத்திற்கான வால்பேப்பர்கள் (separate wallpapers for light and dark themes) ஸ்டிக்கர்களுக்கான தேடல் அம்சம் (a search feature for Stickers) மற்றும் புதிய அனிமேஷன் பேக் ( new animated pack) உள்ளிட்ட சில புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது.

தனிப்பயன் வால்பேப்பரை அமைக்கும் அம்சம் சிறிது காலமாக இருந்தாலும், தனிப்பட்ட சாட்களுக்கு தனிப்பயன் வால்பேப்பர்களை வைக்கும் திறனை அப்டேட் இப்போது சேர்க்கிறது. மேலும், புதிய அப்டேட் உலக சுகாதார அமைப்பின் (WHO) ‘டுகெதர் அட் ஹோம்’ (Together at Home) ஸ்டிக்கர் பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பையும் கொண்டு வருகிறது, இது இப்போது முழுமையாக அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது.

புதிய வாட்ஸ்அப் அப்டேட் பயனர்கள் ஒவ்வொரு தொடர்புக்கும் (Contacts) அல்லது குழுவிற்கும் (Group) வெவ்வேறு வால்பேப்பரை வாட்ஸ்அப்பில் வைக்க அனுமதிக்கும். வாட்ஸ்அப், இப்போது பயனர்கள் யாருடன் சாட் செய்கிறார்கள் என்பதை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். “உங்கள் வாட்ஸ்அப் சாட்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன, அதனால் தான் நாங்கள் உங்களுக்காக தனிப்பயன் சாட் வால்பேப்பர்களை அறிமுகப்படுத்துகிறோம் என்றது.

உங்கள் மிக முக்கியமான சாட்கள் மற்றும் பிடித்த நபர்களுக்கு தனிப்பயன் வால்பேப்பரைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சாட்களை தனிப்பட்டதாகவும், வேறுபடுத்தக்கூடியதாகவும் ஆக்குங்கள், மேலும் தவறான சாட்டில் தவறான மெசேஜை, அனுப்புவதைப் பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை” என்று வாட்ஸ்அப் அதன் வெளியீட்டில் கூறியது.

மேலும், பயனர்கள் தேர்வு செய்வதற்கு அதிகமான டூடுல் வால்பேப்பர்கள் (Doodle wallpapers) உள்ளன என்றும் அது இப்போது வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன என்றும் நிறுவனம் அறிவித்தது. மேலும், ஸ்டாக் வால்பேப்பர் தரவுத்தளத்தில் உலகம் முழுவதிலுமிருந்து இயற்கை மற்றும் கட்டிடக்கலை படங்களுடன் கூடுதல் பின்னணிகள் இதில் உள்ளன. புதிய ஸ்டிக்கர் தேடல் பயனர்களை ஸ்டிக்கர்களை வேகமாகவும் எளிதாகவும் கண்டுபிடிக்க அனுமதிக்கிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்காக வாட்ஸ்அப் அதன் மறைந்துபோகும் செய்தி அம்சத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. புதிய அம்சம் இயக்கப்பட்டால், சாட்டில் உள்ள செய்திகள் ஏழு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும். காணாமல் போகும் செய்திகளின் அம்சம் குழு சாட்களிலும் பயன்படுத்தப்படலாம், அங்கு நிர்வாகி (Admin) மட்டுமே செயல்படுத்த / முடக்க (enable/disable) விருப்பம் உள்ளது. இந்த ஆப்ஸ் இமேஜ்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்டுக்கள், லோகேஷன் உள்பட பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. அதேபோல் வாய்ஸ்கால், வீடியோகால் போன்றவற்றை இலவசமாகவும் நமக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here