ஹோட்டல் சாம்பார் டிப்ஸ்

0
32

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 250 கிராம்

எண்ணெய் – 150 ml
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 3முருங்கைக்காய் – 2
கொத்தமல்லி – 1 கொத்து
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 6
பூண்டு – 10 பற்கள்
கத்தரிக்காய் – 4
கடுகு – 1/2 tbsp
சீரகம் – 1/2 tbsp
உளுத்தம் பருப்பு – 1/2 tbsp
நெய் – 1 tbsp
உப்பு – 1/2 tbsp
மிளகாய் தூள் – 1/2 tbsp
மஞ்சள் – 1/2 tbsp
சீரகப் பொடி – 1/2 tbsp
தனியா பொடி – 1/2 tbsp
பெருங்காயத்தூள் – 1/4 tbsp
புளி – மிதமான அளவு
தண்ணீர் – 1 1/2 லிட்டர்

செய்முறை :

பருப்பை அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஊற வைத்துவிடுங்கள். பின் குக்கரில் போட்டு 3 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்ன வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்குங்கள். பின் கத்தரிக்காய் சேர்த்து வதக்குங்கள்.

பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயும் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக தக்காளி சேர்த்து குழைய வதக்கிக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக அனைத்து தூள் வகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வதக்கியதும் முருங்கைக்காயை சேர்த்து பிரட்டுங்கள்.

காய் வேக வைக்க மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றுங்கள். கொதிக்க வைக்க தட்டு போட்டு மூடுங்கள்.

பச்சை வாசனை போனதும் வேக வைத்த பருப்பை மத்தால் கடைந்துவிட்டு குழம்பு கூட்டி வைத்துள்ள கடாயில் கொட்டி கலந்துவிடுங்கள்.

பின் ஊற வைத்த புளி தண்ணீரை கரைத்து ஊற்றிவிடுங்கள். அடுத்ததாக போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அதோடு உப்பு கலந்து விட்டு சரிபார்க்கவும்.

கொதித்து வந்ததும் தாளிக்க மற்றொரு கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிக்க விடடுங்கள்.

பின் கருவேப்பிலை , கொத்தமல்லி , காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு கொதிக்கும் சாம்பாரில் கொட்டுங்கள்.

பின் உடனே அடுப்பை அணைத்துவிட்டு நெய் சேர்த்து விட்டு பின் கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here