சி.எஸ்.கே பேட்டிங்.. மும்பை அணியில் ரோஹித் அவுட்..

0
22

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 41-வது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் காயம் காரணமாக இன்றையப் போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பொல்லார்டு கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டாஸூக்கு பின் சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனி, நாங்கள் டாஸ் ஜெயித்து இருந்தாலும் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். மேலும் சென்னை அணியில் வாட்சன், சாவ்லா, கேததர் ஜாதவ் அணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். அவருக்கு பதிலாக இம்ரான் தாஹீர், ஜெகதீசன், ருத்துராஜ் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

சி.எஸ்.கே உத்தேச அணி : சாம் குர்ரன், ஃபாஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, என் ஜெகதீசன், எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷார்துல் தாகூர், ஜோஷ் ஹேசில்வுட், இம்ரான் தாஹிர் ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here