5ஜி வசதியுடன் அசத்தல் லுக்கில் அறிமுகமானது ஐஃபோன் 12 சீரிஸ்..

0
21

அடுத்த தலைமுறை 12 சீரிஸ் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இந்திய சந்தைகளில் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே: சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ ஆகியவை 6.1 இன்ச் டிஸ்பிளே, ஐபோன் 12 மினி மாடலில் 5.4 இன்ச் , ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 6.7- இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

சிம்: டூயல் சிம் (நானோ + ஈசிம்) ஆதரவு கொண்ட ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவைகள் iOS 14 மூலம் இயங்குகின்றன

நிறம் :

5.4 இன்ச் ஐபோன் 12 மினி மாடல் : 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி வெர்ஷன்களில், பிளாக், வைட், ரெட், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும்.2. 6.1 இன்ச் ஐபோன் 12 : 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி வெர்ஷன்களில், பிளாக், வைட், ரெட், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும்.

3. 6.1 இன்ச் ஐபோன் 12 ப்ரோ : 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி வெர்ஷன்களில், கோல்டு, சில்வர், கிராபைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும்.

4. 6.7 இன்ச் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் : இந்த மாடல் 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி வெர்ஷன்களில் கோல்டு, சில்வர், கிராபைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும்.

பேட்டரி மற்றும் சார்ஜிங்: வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கியுள்ளது. 15W வரை மாக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங்கையும், 7.5W வரை குய் வயர்லெஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது

கேமரா:

இந்த நான்கு மாடல்களிலும் 12 மெகாபிக்சல் எஃப் / 2.2 முன்பக்க செல்ஃபீ கேமராக்கள் உள்ளன. LiDAR ஸ்கேனர் இணைக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

ஐஃபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களில் 12 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமராக்கள். ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் 12 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா

ஐஃபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆனது 47 % பெரிய வைட் கேமரா சென்சாரை கொண்டுள்ளது. ஐஃபோன் 12 ப்ரோ ஆனது 4 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடன் வருகிறது.

விலை:

5.4 இன்ச் ஐஃபோன் 12 மினி மாடல் விலை : இந்திய மதிப்பில் ரூ. 51,110. 2. 6.1 இன்ச் ஐஃபோன் 12 விலை இந்திய மதிப்பில் ரூ. 58,410. 3. 6.1 இன்ச் ஐஃபோன் 12 ப்ரோ விலை இந்திய மதிப்பில் ரூ. 73,050. 4. 6.7 இன்ச் ஐஃபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்திய மதிப்பில் ரூ. 80,370.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here