ரெட்மி 9ஏ புதிய வேரியண்ட் அறிமுகம்

0
15

இந்தியாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை CNY999 இந்திய மதிப்பில் ரூ. 10,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

தற்சமயம் புதிய மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஏற்கனவே ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி, 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ப்ரூஃப்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here