ஜெப்ரானிக்ஸ் டால்பி அட்மோஸ் சவுண்ட்பார் இந்தியாவில் அறிமுகம்

0
17

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப்-ஜூக் பார் 9700 ப்ரோ டால்பி அட்மோஸ் சவுண்ட்பாரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது டால்பி அட்மோஸ் வசதி கொண்ட இந்தியாவின் முதல் சவுண்ட்பார் மாடல் ஆகும். டால்பி அட்மோஸ் வசதியுடன் பொழுதுபோக்குகளில் புரட்சியை ஏற்படுத்த சப்வூஃபர் கொண்ட சவுண்ட்பார் மாடல் ஆகும்.

ஒருவர் விரும்பும் பொழுதுபோக்கு எதுவாக இருந்தாலும், அதற்கு டால்பி அட்மோஸ் சிறந்தது. ஜெப்-ஜூக் பார் 9700 ப்ரோ டால்பி அட்மோஸ் சவுண்ட்பார் மூலம் மெய்மறந்த அதிவேக ஒலி அனுபவத்தை வீட்டிலேயே பெற முடியும்.

பொதுவாக மல்டி சேனல் சரவுண்ட் ஸ்பீக்கர்களில் வயர்கள் சிக்கலாகி சிரமத்தை ஏற்படுத்தும். இந்த சவுண்ட் பார் அதுபோன்ற சிக்கல்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மிக எளிமையான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சவுண்ட் பார் மூலம் முப்பரிமாண ஒலி அனுபவத்தை துல்லியமாக நீங்கள் பெற முடியும்.

குறிப்பாக எந்த சிக்கலான வயர்களும் இல்லாமல், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில், எல்லா விதமான அறையிலும் அமைக்கக்கூடிய வகையில் இந்த சவுண்ட் பார் உள்ளது.

“ஜெப்-ஜூக் பார் ப்ரோ டால்பி அட்மோஸ்” 16.51cms சப் வூபஃர் டிரைவருடன் உரத்த சத்தமுள்ள மற்றும் பஞ்சி பேஸ் அனுபவத்துடன் வருகிறது. சவுண்ட்பார் குவாட் 5.71 cms மற்றும் டூயல் 5.08 cms டிரைவருடன் வருகிறது, இதன்மூலம் தெளிவான ஆடியோ மற்றும் அதிவேக ஆடியோவைக் அனுபவிக்க முடியும்.

சவுண்ட்பாரில் தொந்தரவு இல்லாத அமைப்பு மட்டுமின்றி யுஎஸ்பி / ஆக்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெச்டிஎம்ஐ (ஏஆர்சி) அல்லது ஆப்டிகல் இன்புட், டூயல் ஹெச்டிஎம்ஐ இன்புட், ஒரு ஹெச்டிஎம்ஐ அவுட்புட்டுடன் வருகிறது.

புதிய ஜெப் ஜூக் பார் 9700 ப்ரோ டால்பி அட்மோஸ் சவுண்ட்பார் முன்னணி ப்ளிப்கார்ட் தளத்தில் 2020 செப்டம்பர் 21 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.17,999/- என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here