நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது??

0
452

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால், தனி மனித இடைவெளி இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.

இவை அனைத்தையும் விட நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். பொதுவாக காய்ச்சல், இருமல் என எதுவந்தாலும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே அதை விரட்டியடிக்கிறது. அந்த வகையில், கொரோனாவுக்கு எதிரான போரில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டும். உணவில் கலோரிகள், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ், வைட்டமின்கள் போன்றவை நிறைந்திருக்க வேண்டும்.

ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்

நமது உடலும், மூளையும் வயதாகக் காரணம் இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் தான். உடல் செல்கள் அழிய அழிய புதுப்பித்துக் கொண்டே இருக்கும். ஆனால், மூளை செல்கள் அவ்வாறு திரும்ப வராது. இதனாலேயே வயது ஆகஆக ஞாபக மறதியும் ஏற்படுகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கும் ஆக்ஸிஜனேற்றிகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு ஆகும். செலினியம், வைட்டமின் ஏ, ஈ & சி, லைகோபீன் மற்றும் லுடீன் ஆகியவை ஆக்ஸிஜனேற்றங்களின் வளமான ஆதாரங்கள். பால் பொருட்கள், முட்டை, பச்சை இலை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பாதாம், வேர்க்கடலை போன்ற உணவுகள் இதில் அடங்கும்.

வைட்டமின்கள்

வைட்டமின்கள் டி, பி 6 மற்றும் துத்தநாகம் உடலுக்கு இன்றியமையாதவை, ஒவ்வொன்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் டி ஊட்டச்சத்து, நமது இரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவை சீராக்குகிறது. மேலும் சுவாச நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மூக்கடைப்பு, தொண்டை புண் போன்ற தொற்றுகளைக் குணமாக்கும் டி-செல்களை (டி-லிம்போசைட்டுகள்) உற்பத்தி செய்யவும்.  துத்தநாகம் உதவுவதாக கூறப்படுகிறது. இறைச்சி, கொட்டைகள், டார்க் சாக்லேட், பயறு வகைகள், வாழைப்பழம் போன்றவற்றில் இந்த ஊட்டச்சத்துகள் உள்ளன.

அழற்சி நோய்

அழற்சி என்பது உடல் தன்னைத்தானே நோய்த்தொற்றுகள், காயங்கள் மற்றும் நச்சுகளுக்கு எதிராக போராடும் செயல்முறையின் வெளிப்பாடு ஆகும். உங்கள் செல்களை ஏதாவது பாதிக்கும் போது, உங்கள் உடல் தானாகவே சில வேதியல் மாற்றங்களை வெளியிடுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட் ஏ, ஈ மற்றும் சி, ஆகியவை அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

நச்சுத்தன்மை

நச்சுத்தன்மை என்பது உடலில் உருவாகும் கேடுதன்மையை,  கல்லீரல் நச்சாக மாற்றுவது ஆகும்.  அடிக்கடி தண்ணீர் குடிப்பது, ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகள், சர்க்கரை மிகுந்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வது போன்றவை உடலில் ஏற்படும் நச்சுத்தன்மையை குறைக்கிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here