ரெட்மியின் திடீர் வெளியீடு!- நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இன்று முதல் விற்பனை!

0
366

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மாறுபாடு, இன்று விற்பனைக்கு வர உள்ளது. சியோமி தனது சமீபத்திய ட்வீட்டில், ஸ்மார்ட்போனின் மேற்கூறிய மெமரி மாறுபாடு இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தற்போது நிலவும் லாக்டவுன் மற்றும் உற்பத்தி சிக்கல்கள் காரணமாக ஃபிளாஷ் விற்பனை மூலம் மட்டுமே வாங்க கிடைக்கிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மாடல் ஆனது 128 ஜிபி உள் சேமிப்பு திறனை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ,விலை மற்றும் விற்பனை:

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை இந்தியாவில் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த மடல் Mi.com வலைத்தளத்திற்கு மட்டுமே பிரத்தியேகமானது, மேலும் இதன் விற்பனை மதியம் 12 மணிக்கு (நண்பகல்) தொடங்கும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஏர்டெல் ரூ.298 மற்றும் ரூ.398 வரம்பற்ற பிளான்களில் டபுள் டேட்டா சலுகைகள் கிடைக்கும்.

அமேசான் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் நோ காஸ்ட் மற்றும் நிலையான EMI விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ப்ரைம் மெம்பர்கள் அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டையைப் பயன்படுத்தி ஐந்து சதவீத தள்ளுபடியையும் பெற முடியும்.

  ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விவரக்குறிப்பு:

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆனது அரோரா ப்ளூ, க்ளேசீயர் ஒயிட் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான MIUI 11 கொண்டு இயங்குகிறது. இது 6.67 இன்ச் அளவிலான புல் எச்டி+ (1080×2400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை 20: 9 என்கிற திரை விகிதத்துடன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு ட்ரிபிள் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது, இந்த பாதுகாப்பு பின்புறம் மற்றும் முன்புறம் மற்றும் பின்புற கேமரா அமைப்பில் அமைந்துள்ளது.

ப்ராசஸர் & ரேம்,ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC கொண்டு இயக்கப்படும் இந்த புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here