நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்
இந்த நோயெதிரிப்பு பானங்கள் நம் உடலில் நோயால் அழியும் செல்களை பாதுகாத்தல், வயதாகுவதை தடுத்தல், உடல் ரீதியாகவும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது உங்க உடலில் உள்ள நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய் களுக்கு காரணமான கிருமிகளை எதிர்த்து போராடுவதற்கு உங்க உடலை தயார் செய்கிறது. இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.
தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
இரவில் ஊற வைத்த 10 பாதாம் பருப்பு (தோல் நீக்கியது)
இரவில் ஊற வைத்த 5 பேரீச்சம் பழம் (விதை நீக்கியது)
1 கப் பசும் பால்
1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
1/8 டீ ஸ்பூன் ஏலக்காய்
1 டீ ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் தேன்
பயன்படுத்தும் முறை
ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 2-3 தடவை அரைத்து நன்றாக வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்கான நோயெதிரிப்பு பானம் ரெடி.
வேலை செய்யும் விதம்
பாதாம் பருப்பு
பாதாமில் விட்டமின் ஈ உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடம்புக்கு தேவையான புரோட்டீன் மற்றும் இரும்புச் சத்துகள் உள்ளன.
பேரீச்சம் பழம்
பேரீச்சம்பழத்திலும் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. நோயால் பாதிக்கப்பட்டு அழியக்கூடிய செல்களை இது காக்கிறது.
மஞ்சள் தூள், ஏலக்காய் மற்றும் தேன் எல்லாமே அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. எனவே இந்த பொருட்கள் அடங்கிய பானத்தை குடிக்கும் போது உங்க நோயெதிரிப்பு சக்தி அதிகரிக்கிறது.