தவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு

0
850

தற்போது மழை சீசன் என்பதால் அதிகளவு நோய் ஏற்படுகிறது. ஆதலால் ஏற்படும் நோய் அறிகுறிகளும் மற்றும் நோய் ஏற்படுவதை தவிர்க்கும் முறைகளையும் காண்போம்.

கொசுக்களால்தான் அதிகளவு நோய் ஏற்படுகிறது. ஆதலால் உங்கள் சுற்றுபுறங்களை சுகாதாரமாக வைத்திருந்தால் இப்பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் நோய் வந்து விட்டபிறகு என்ன செய்வது?

மலேரியா

காய்ச்சல், நடுக்கம், தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் மலேரியாவின் அறிகுறிகளாகும். மலேரியா காய்ச்சல் பெண் அனாஃபிலிஸ்  என்ற கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்.

டெங்கு

டெங்கு காய்ச்சலும் கொசுக்களால் ஏற்படுவதுதான். இக்காய்ச்சல் வந்தால் உடல் வலி, மூட்டு வலி மற்றும் தடிப்புகள் போன்றவை  உண்டாகும். நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் கொசுக்கள்தான். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி விலக்கிகளைப் பயன்படுத்த  வேண்டும்.

சிக்கன் குனியா

ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்கன்குனியா. திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும்.  ஏடிஸ் கொசுக்கள் வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரில்தான் அதிகம் இனப்பெருக்கமாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும். இதனை தடுக்க  தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

டைபாய்டு

டைபாய்டு என்ற நோய், தண்ணீரினால் வருவதாகும். டைபாய்டு வர காரணமாக இருப்பது எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா. அசுத்தமான  உணவு மற்றும் தண்ணீரை உபயோகிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற சீர்கேட்டினாலும் உருவாகும்.
அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவைகள்தான்.

வயிற்றுப்போக்கு

மழைக்காலத்தில் எளிதில் தாக்கும் நோய்களில் வயிற்றுப்போக்கும் ஒன்று. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது நீராதாரம் அதிகளவு  வெளியேறும். இதன்காரணமாக நடக்க முடியாமை, உடல் சோர்வு ஏற்படும். இந்நோய் ஏற்பட்டால் காலதாமதமின்றி மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை பெறுவது அவசியம். வயிற்றுப்போக்கு பெரும்பாலும் சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரால்  ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கில்  இருவகைகள் உண்டு. கடுமையான வயிற்றுப்போக்கு (அக்யூட் டையரியா), தீவிரமான வயிற்றுப்போக்கு (குரோனிக் டையரியா). இவை இரண்டையுமே  வரும் முன் தடுக்க முதலில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் கையை கழுவ வேண்டும். வெந்நீரைக் குடிப்பது நல்லது.

காலரா

காலரா இருந்தால், கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகள், சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது.

அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரல் செயல் பிறழ்ச்சி. இவற்றை தடுக்க கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.  சத்தான பானங்களை அதிகமாக குடிக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல்

வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் உருவாகும். மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி.  இக்காய்ச்சல் தொடர்ந்து 37 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும். நிலவேம்பு பொடியுடன் தண்ணீர்  சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.

மழைக்காலங்களில் சிறந்த உணவு

மதிய உணவின்போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து  சாப்பிடுவது நல்லது. மழைக்காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்­ணீர் சத்து அதிகமுள்ள  காய்கறிகள் ஒத்துக்கொள் ளாது. நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழைக்காலங்களில்  உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பொரியல் செய்யும்போது அவற்றில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப்பயறு, கேழ்வரகு, கீரை  ஆகியவற்றைச் சேர்க்கக்கூடாது. மழைக்காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரை  துகள்களை போட்டு வைக்கலாம். கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.  பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய்  போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.

உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவான மீன், முட்டை, கறி, சிக்கன்  போன்றவற்றை பிரஷ்ஷாக சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக்கூடாது. சூடாக சாப்பிட வேண்டும். பஜ்ஜி,  போண்டா அதிகம் சாப்பிடாமல், உப்பு உருண்டை, இட்லி சாம்பார், பிரட் ரோஸ்ட் என சாப்பிடலாம். மேலும் தினமும் சாப்பிடும் உணவையே சற்று  சூடாகச் சாப்பிட்டால் போதும்.

உணவுகளை பாதுகாக்க

சில உணவுப் பொருட்களில் பூஞ்சைகள் பரவும் பருவம் மழைக்காலம். இதனைத் தவிர்க்க சாப்பிடக் கூடிய அளவிற்கு மட்டுமே சமைப்பது நல்லது. பருப்பு, மாவு போன்றவற்றை இறுக்கமான, காற்று புகாதபடி உள்ள பாட்டில்களில் வைக்க வேண்டும்.  பயறு வகை களை பூச்சிகள் அல்லது  புழுக்களிடமிருந்து காப்பாற்ற, அவற்றின் மீது கடுகு எண்ணெயை சிறிதளவு தெளித்து வைக்கவும். உணவு தானியங்களை புத்துணர்வுடன் வைத்திருக்க  அவற்றின் மீது சிறிதளவு ஆமணக்கு எண்ணெயையும் தெளிக்கவும்.

மழை கால நோய்களுக்கு மருத்துவ குறிப்புகள் சில:

  • நிலவேம்பு குடிநீர் அணைத்து விதமான காய்ச்சலையும் குணபடுத்தும்.
  • ஈர பசையுடன் உள்ள வேப்பமர பட்டையை இடித்து அதில் கால் பங்கு சீரக பொடியுடன் பசும்பாலில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
  • திப்பிலியுடன் , குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும்.
  • துளசி, வில்வ இலை, வெப்ப இலை, சந்தனம், கடுக்காய், மிளகு, சிற்றரத்தை ஆகியவை பொடியாக அரைத்து காயவைத்து கொண்டால், காய்ச்சல் வரும் சமயம் 1 தேக்கரண்டி வென்னீரில் கலந்து காலை மாலை குடித்து வர, சுரம் குணமாகும். வேப்பிலையை வறுத்து அடியில் வைத்து படுத்தால், சுரம் போய்விடும்.
  • உத்தாமணி-வல்லாரை இலைகளை மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், காய்ச்சல் சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here