சிங்கப்பூரின் சுற்றுலா தளங்கள்

0
1749

சிங்கப்பூர் :

சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்கம் சிங்கப்பூர். அழகிய நாடுகள் பல இருந்தாலும் தனித்துவமான இடங்களால் ஸ்கோர் செய்வது சிங்கப்பூரின் விசேஷம். பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே (Gardens By The Bay), சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் (விமானம்) மூலம் நகர்வலம் , சில்லறை வர்த்தக வளாகமான ஜுவல் சங்கி விமான நிலையம் (Jewel Changi Airport) போன்ற மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஏராளமான இடங்கள் சிங்கப்பூரின் பக்காவான டூரிஸ்ட் ஸ்பாட்டுகளாக திகழ்கின்றன!

 

1.    Sentosa

நகரத்திலிருந்து வெறும் 15 நிமிடங்கள் தள்ளி இருக்கும் செந்தோசா தீவு, சிங்கப்பூரிலேயே மிகவும் பிரபலமான சுற்றிலா தளம். அது, கருப்பொருள் கொண்ட கவர்ச்சி இடங்கள் (themed attractions), பசுமையான மழைக்காடுகள், கடற்கரை, உலக புகழ்பெற்ற கொஃப் மைதானங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள வேடிக்கை நிறைந்த சுற்றுலா தளமாகும். 500 ஹெக்டர் (500 hectares) நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்த சுற்றுலாத்தளம் பார்ப்பவர்களை மெய்சிளிர்க்க வைப்பதோடு, வணிகத்திற்கும் ஓய்வெடுப்பதற்கும் ஏற்ற இடமாக அமைகிறது.                                                            இங்க என்னலாம் இருக்குனா???

1.Butterfly garden

2.Amusement parks

3.Breaath taking aquarium

4. Beach club

2.    Singapore Flyer

165 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூர் flyer, உலகிகேயே இருக்கும் மிகப்பெரிய பெர்ரிஸ் சக்கரம். ஆசிய கண்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கியமான இடமாக திகழ்கிறது. இதிலிருந்து மெரினா பேவின் வானலைகள் மட்டுமில்லாமல் அண்டை நாடுகளான மசேசியாவையும் இந்தோனேசியாவையும் கூட சிறிதளவு காணம முடியும். பயணிகளுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை Singapore flyer அளிக்கும்.

3.    Jurong Bird Park

டாக்டர். கோ கெங் ஸ்வீ அமைத்த இந்த பறவை பூங்கா, உலகில் புகழைப்பெற்றுள்ள பறவை பூங்காகளில் ஒன்றாகும். மிகவும் பெரிதாக இருக்கும் இப்பூங்காவில், 400 வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. வண்ண வண்ணப் பறவைகளைக் கொண்டுள்ள இந்த பூங்காவை வந்துப் பார்ப்பவர்களின் கண்களுக்கு ஒரு குளிர்ச்சியான காட்சியாக அமைந்து, அவர்களை பரவசமடையச் செய்யும்.

4.    Singapore Philatelic Museum

இந்த அரிய வகையான அருங்காட்சியகத்தில், தபால்தலைகள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியங்கள், உலகின் முதல் தபால்கள் யாவை, தபால்தலைகள் அறிவியல், கலாச்சாரம், தொழில்நுட்பம், வரலாறு போன்ற தலைப்புகளை எவ்வாறு பிரதிபலிக்கின்றன, ஆகிய விஷயங்களைப் பற்றி விளக்குகின்றன.

1830-யிலிருந்து இன்றுவரை உள்ள தபால்தலைகளை கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம், சுற்றுலா பார்வையாலர்களுக்க்ய் ஓர் அர்த்தமுள்ள இடமாக அமையும். வரலாறு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளவர், இந்த அருங்காட்சியகத்திற்கு வருவது நல்லது.

ஷாப்பிங் செய்ய சிறந்த 10 இடங்கள்

1.ஆர்ச்சர்ட் சாலை (Orchard Road):

சிங்கப்பூரின் பிரபல சாலையான ஆர்ச்சர்ட் சாலையின் ஆரம்பம் தொடங்கி இறுதி முடியும் வரையிலான அனைத்து பகுதியிலும் வானுயர்ந்த வர்த்தக வளாகங்கள் நிரம்பி வழிகின்றன. லண்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் வீதி மற்றும் ஹாங்காங்கின் ஷிம்சாட்சுயி போன்ற உலகப் புகழ் பெற்ற ஷாப்பிங் இடங்களை நிகர் செய்யும் அளவிற்கு தரம் வாய்ந்த கடைகள் இங்கு உள்ளன. இங்கு பிராண்டட் ஆடைகள் முதல் அணிகலன்கள், உணவுகள் மற்றும் எலக்ட்ரானிக் என அனைத்துப் பொருட்களும் விற்பனையாகின்றன.

அதில் பிரபலம் வாய்ந்த சில கடைகளின் பட்டியல் இதோ, ஐயன் ஆர்ச்சர்ட், ஆர்ச்சர்ட் சென்ட்ரல், என்ஜி ஆன் சிட்டி, ஃபார் ஈஸ்ட் பிளாசா, மண்டரின் கேலரி, பாராகன் ஷாப்பிங் சென்டர், 313@சோமர்செட் மால், நைட்ஸ் பிரிட்ஜ் மால், ராக்ஸ்டார் அட் ஆர்ச்சர்ட் 22 மேலும் பல..

2.சைனாடவுன் சந்தை வீதி(Chinatown Street Market):

19ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த அகதிகளில் 75% பேர் ஓரிடத்தில் குடியேறினர். அந்த இடம் தான் சைனாடவுன் என அழைக்கப்படுகிறது. இங்கு சீனாவில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் கிடைக்கின்றன. குட்டி சீனாவாகவே இந்த இடம் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள கோயில்கள், கட்டிடங்கள், வீதிகள் அனைத்தும் சீனாவின் கட்டிடக் கலைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.

சைனாடவுனில் உள்ள பிரபல ஷாப்பிங் இடங்கள்: ஆன் சியாங் சாலை, புக்ஸ் ஆக்ச்வலி, சைனா ஸ்கொயர் சென்ட்ரல் ஃப்ளி மார்க்கெட், சைனாடவுன் காம்ப்ளெக்ஸ், சிங்கப்பூர் கைவினைஞர்கள் மையம், வீதியோர கடைகள், மிங் ஃபாங் ஆன்டிக் ஹவுஸ், ஓ.ஜி. டிபார்ட்மெண்ட் ஸ்டோர், டன்ஜோங் பாகர் பிளாசா, வியூ பாய்ண்ட், ஹியூ ஹ்வா எம்போரியம் மற்றும் பல.

3.வைவோ சிட்டி (Vivo City):

ஆசியாவிலேயே மிகப்பெரிய வர்த்தக வளாகமாக திகழ்கிறது சிங்கப்பூரில் உள்ள இந்த வைவோ சிட்டி. திரையரங்கம், பொழுதுபோக்கு, சந்தை, துணிக் கடைகள், எலக்ட்ரானிக் ஷாப், மிகப்பெரிய பொம்மைக் கடை, உணவகங்கள் என அனைத்தையும் ஒருங்கே பெற்று பிரம்மாண்ட ஷாப்பிங் மையமாக உள்ளது வைவோ சிட்டி.

ஃபுட் ரிபப்ளிக், ஜாரா, ஒரோட்டன், 4 ஃபுட் கோர்ட்டுகள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, திரையரங்கம் உள்ளிட்டவை இங்கு பிரபலமாக உள்ளது. பாக்கெட்டில் கொண்டு செல்லும் அத்தனை பணத்தையும் ஏப்பம் விடும் சக்தி இந்த ஒரு ஷாப்பிங் மையத்துக்கு மிகவும் எளிமையான ஒரு வேலையாக உள்ளது.

4.ஹாஜி லேன் (Haji Lane):

சிங்கப்பூரின் கம்போங் கிளாமில் உள்ள ஹாஜி லேன், வித்தியாசமான ஷாப்பிங் அனுபவத்தை தர சரியான இடமாக திகழ்ந்து வருகிறது. மற்ற இடங்களில் கிடைக்காத அரிய வகை பொருட்கள் இங்கு ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. வித விதமான துணி ரகங்கள், ஆபரணங்கள், வின்டேஜ் கேமராக்கள் என பல பொருட்கள் வாங்க இந்த இடம் சிறந்த ஒன்று..

பிரபல கடைகள்: டல்சட் ஃபிக், ஃபேபுலஸ் ஃபேட்ஸ், டேங்கர்ஸ், விக்கட் லாண்ட்ரி, ஸாய் எகோ கலெக்‌ஷன், போன்ற பல கடைகள் சுற்றுலா பயணிகளின் ஷாப்பிங் அனுபவத்திற்கு நல்ல தீனி போடும் வகையில் அமைந்துள்ளன.

5. மரீனா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands):

சிங்கப்பூரின் சிறந்த இடங்களில் ஒன்றான மரீனா பே சாண்ட்ஸில் உள்ள கடைகளில் ஷாப்பிங் செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை, அதன் பிரம்மாண்ட சொகுசு கடைகளை பார்வையிட்டு வந்தாலே போதுமானதாக இருக்கும் வகையில் அத்தனையும் அரண்மனைகளுக்கு ஈடானதாக இருக்கும் தன்மைகளை கொண்டுள்ளன. அதிலும், 57வது மாடியில் இருந்து பார்வையிட்டால் கடலின் அழகிய காட்சி மனதை கவரும் என்பதில் ஐயமே இல்லை.

6. லிட்டில் இந்தியா (Little India):

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லிட்டில் இந்தியாவில் உள்ள சிராங்கூன் சாலையில் எண்ணற்ற வண்ணங்கள் வசீகரிக்கும் கடைகள் உள்ளன. இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் இங்கு தனி எம்.ஆர்.டி ஸ்டேஷனும் உள்ளது. வாசனை திரவியங்கள், பூ மாலைகள், நகைகள், வெள்ளிப் பொருட்கள், பாரம்பரிய உணவுகள் என பல விதமான பொருட்கள் வாங்க சிறந்த இடமாக லிட்டில் இந்தியா திகழ்கிறது.

பிரபல கடைகள்:

எருது சாலை(Buffalo Road), சந்த்னா மார்ட், சிட்டி ஸ்கொயர் மால், லிட்டில் இந்தியா ஆர்கேட், முஸ்தபா மையம், செராங்கூன் சாலையோர கடைகள், சிம் லிம் ஸ்கொயர் மற்றும் கணினி மையம், சுங்கெய் சாலை தீவ்ஸ் மார்க்கெட், தி வெர்ஜ் ஷாப்பிங் மால் மற்றும் பல..

7.கிளார்க் படகுத் துறை (Clark Quay):

சிங்கப்பூர் குட்டித் தீவில் உள்ள இந்த இடத்தில் ஓடும் நதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கிளார்க் படகுத் துறை வரலாற்று சிறப்புடையதாகும். நவீன சிங்கப்பூரின் தந்தையாக கருதப்படும் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃப்பிள்ஸ் இந்த இடத்தில் தான் முதன் முதலாக வந்து இறங்கினார். அவரது திருவுருவச் சிலையும் இந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள இரவு விடுதிகள், மற்றும் பப்கள் சிங்கப்பூரில் இரவு பொழுதை கழிக்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

பிரபல இடங்கள்: சென்ட்ரல் கிளார்க் குவே, கிளார்க் குவே, ஃபிப்டி ஃபைவ் டெய்லர், ஃபுனான் டிஜிட்டல் லைஃப் மால், கிரேட் வோர்ல்ட் சிட்டி, லியாங் கோர்ட், ரிவர்சைட் பாயிண்ட், ராயல் செலாங்கர், யுஇ ஸ்கொயர் ஷாப்பிங் மால் மற்றும் பல..

8.முஸ்தபா மையம் (Mustafa Center):

நேரம் காலம் பார்க்காமல் ஷாப்பிங் செய்ய விரும்புவர்களுக்காகவே பிரத்யேகமாக 24 மணி நேரமும் திறந்திருக்கும் மையம் தான் முஸ்தபா மையம். 2 மிகப்பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் ஒன்றிணைந்து முஸ்தபா மையம் என்ற பெயரில் ஒரே கட்டிடத்தில் இயங்கி வருவது இதன் தனிச் சிறப்பு. எலக்ட்ரானிக் பொருட்கள், நகைகள் மற்றும் கடிகாரங்கள், சூப்பர்மார்க்கெட்டுகள், அழகு மற்றும் ஆரோக்கிய சாதனங்கள், ஆடைகள், டிராவல் மற்றும் உணவு என பல விஷயங்கள் இந்த முஸ்தபா மையத்தில் உள்ளன.

9. புகிஸ் சந்தை வீதி (Bugis Street Market):சிங்கப்பூரில் எப்போதுமே கூட்டம் அலைமோதும் சந்தையாக புகிஸ் சந்தை வீதி அறியப்படுகிறது. மலிவான விலையில் தரமான பல பொருட்கள் இங்கு கிடைப்பது தான் இதற்கு காரணம். புகிஸ் எம்.ஆர்.டி ஸ்டேஷனுக்கு மிக அருகாமையில் உள்ள இந்த சந்தை வீதியில் பலவிதமான கஃபேக்கள், பார்கள், உணவு விடுதிகள், துணிக் கடைகள் உள்ளன. நள்ளிரவு வரை இங்கு கூட்டம் குறையாமல் ஷாப்பிங் செய்யப்படுவது இந்த இடத்தின் அடையாளமாகவே மாறியுள்ளன. 2 வெள்ளிகள் முதல் 15 வெள்ளிகள் வரை இங்கு மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கின்றன.

10.ராஃப்பிள்ஸ் சிட்டி ஷாப்பிங் சென்டர் (Raffles City Shopping Center):

சிங்கப்பூரின் பிரபல ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள பிரம்மாண்ட மால்கள் இருப்பினும் சிவிக் மாவட்டத்தின் பகுதியில் உள்ள ராஃபிள்ஸ் சிட்டி ஷாப்பிங் சென்டருக்கு ஒரு தனி மவுசு உள்ளது மறைக்க முடியாத ஒன்று. கிளார்க் படகுத்துறை மற்றும் மரினா பே சாண்ட்ஸின் மிக அருகில் உள்ள இந்த ஷாப்பிங் சென்டர் சுற்றுலா பயணிகளையும் ஷாப்பிங் விரும்பிகளையும் நிச்சயம் ஈர்க்கும் என்பதில் ஐயமே இல்லை.

இந்த பகுதியில் சிங்கப்பூரில் வசதிகள் மிக்க சொகுசு கடைகள் இருக்கும் பகுதிகளையே பெரும்பான்மையாக பார்த்துள்ளோம்.. சிங்கப்பூரில் மலிவு விலைக்கு பிரபலமான இடங்களும் உள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here