காலை சாப்பாடு
வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டும் இல்லாமல் , வீட்டிலிருப்பவர்களும்கூட காலை உணவைத் தவிர்ப்பது வழக்கமாகி வருகிறது. காலை உணவுதான் அன்றைய நாளின் உற்சாகத்துக்கு அடிப்படை. காலை உணவாக, ஒரு முட்டை, இரண்டு பழங்கள்/ இட்லி, சாம்பார்/ சாண்ட்விச், ஜூஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.
நடை பயிற்சி
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அத்துடன் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி, சூரிய ஒளியிலிருந்து கிடைப்பதால் காலை அல்லது மாலை நேரங்களில் சூரிய ஒளிபடுமாறு நடைப்பயிற்சி செய்யலாம். இதுதவிர, குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு நடந்து செல்வது அல்லது சைக்கிளில் செல்வது எனப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.
தேவையான தூக்கம்
ஆரோக்கியமான உடலுக்குச் சராசரியாக எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். அதிலும் பெண்கள் 8 முதல் 10 மணிநேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். சிறந்த உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணி தூக்கம். ஆகவே, தூக்க நேரத்தைக் குறைத்து வேலையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் அருந்துவது
உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். இதன்மூலம் டிஹைட்ரேசன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்” என்கிறார் காவியா கிருஷ்ணன்.
சரும பாதுகாப்பு
வயது அதிகமாகும்போது சருமத்தில் எண்ணெய் சுரப்பு குறைந்துகொண்டே வரும். இதனால், சரும வறட்சி, சருமச் சுருக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, முதுமை தோற்றம் ஏற்படும். பொதுவாக 30 வயதைக் கடந்தவர்களுக்கு சருமப் பிரச்னைகள் வரலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், சரும நோய் நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.