சமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு

0
983

இன்றைய சூழலில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது. பெரும்பாலானோர், காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் செல்போனைத் தேடி எடுத்து, சமூக வலைதளங்களைப் பார்ப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். குறுஞ்செய்திகளைப் பார்ப்பது, பிறந்தநாள் வாழ்த்து சொல்வது எனச் சமூக வலைதளங்களுக்குள்ளேயே மூழ்கிவிடுகின்றனர். இவர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஆஸ்திரேலியாவிலுள்ள ஃப்லைண்டர்ஸ் பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது.

அதில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு மனஅழுத்தம் மற்றும் பல்வேறு மனநலப் பிரச்னைகள் ஏற்படலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு, `தி லான்செட்’ இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வுகுறித்து மனநல மருத்துவர் கே. அரவிந்த்திடம் கேட்டோம். “ஒருவர், மதுப்பழக்கத்துக்கு அறிமுகமாகிறார் என்றால், ஒரு காலகட்டத்துக்குப் பிறகு, அவர் குடிக்கும் அளவு அதிகரித்து, தீவிர மதுப்பழக்கத்துக்கு ஆளாகிவிடுவார். அதனால், அவர் ஆப்செஷன்’ (Obsession) என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு, மதுப்பழக்கத்தைக் கைவிட முடியாமல் தவிப்பார்.

மது அருந்தினால் மட்டுமே அவர்களுக்கு திருப்தி கிடைக்கும். அதுபோலத்தான், சமூக வலைதளங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்களும், ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியேற முடியாமல், அதைப் பார்த்தால்தான் மனம் திருப்தியாக இருக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இப்போது, பெரும்பாலானோரின் கையில் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அவர்களுக்கு, முகம் தெரியாத நண்பர்கள் பழக்கமாகிறார்கள். ஒருநாள் திடீரென்று அவர்களிடமிருந்து சமூக வலைதளத்தில் எந்தவிதமான தகவலும் வராதபோது, ` ஆப்செஷன்’நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால் மனதில் வெறுப்பு தோன்றும்.

முகம் தெரியாத நண்பருக்கு மெசேஜ் அனுப்பி, அதற்கு அவரிடமிருந்து இரண்டு நாளாகியும் பதில் வரவில்லையென்றால், மூன்றாவது நாள் அவருக்கு கோபம் உண்டாகும். இது, விரக்தியடைந்த மனநிலை (Frustrated mood) ஆகும். இந்தக் கோபம், அடுத்த இரண்டு நாள்களில் எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்க ஆரம்பிக்கும். இதனால், தன்னை ஏதாவது துன்புறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போது, மனஅழுத்தம் ஏற்படும். ஒருகட்டத்தில், மனஅழுத்தம் தீவிரமடைந்து தற்கொலை எண்ணத்தைக்கூட தூண்டலாம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here